ஆட்டோ செய்தி

ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.

F77 பைக்கின் ஸ்பேஸ் எடிஷனை அறிமுகப்படுத்திய அல்ட்ரா வைலட் நிறுவனம்

வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவில் தரையிறங்கவிருக்கிறது இந்தியாவின் மூன்றாவது நிலவுத் திட்டமான சந்திரயான் 3. இந்நிலையில், இதனைக் கொண்டாடும் விதமாக, பெங்களூருவைச் சேர்ந்த அல்ட்ரா வைலட் என்ற எலெக்ட்ரிக் பைக் நிறுவனம், புதிய பைக் எடிஷன் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

நாளை அறிமுகமாகிறது இந்தியாவிற்கான வாகன தர நிர்ணயத் திட்டமான 'பாரத் NCAP'

இந்தியாவிற்கான சொந்த வாகன உறுதித்தன்மை மதிப்பீட்டு திட்டமான 'பாரத் NCAP'-ஐ நாளை அறிமுகப்படுத்தவிருக்கிறார் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி.

இந்தியாவில் ஸ்ட்ராங் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் ரெனோ

டொயோட்டா மற்றும் மாருதி சுஸூகியை அடுத்து, இந்தியாவில் ஸ்ட்ராங் ஹைபிரிட் பவர்ட்ரெயின்களை தங்களுடைய எதிர்கால கார் மாடல்களில் அறிமுகப்படுத்தத் ரெனோ நிறுவனம் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

20 Aug 2023

ஹோண்டா

செப்டம்பர் 4ல் இந்தியாவில் வெளியாகிறது ஹோண்டாவின் புதிய எலிவேட்

கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய தங்களுடைய புதிய மிட்சைஸ் எஸ்யூவியான 'எலிவேட்'டை, வரும் செப்டம்பர் 4-ம் தேதி இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஹோண்டா.

20 Aug 2023

ஹோண்டா

இந்தியாவில் என்னென்ன அம்சங்களுடன் வெளியாகியிருக்கிறது ஹோண்டா லிவோ?

இந்தியாவில் கம்யூட்டர் பைக் பிரிவில் 2023ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட லிவோ மாடலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டது ஹோண்டா. என்னென்ன அம்சங்களுடன், என்ன விலையில் வெளியாகியிருக்கிறது லிவோ?

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எஸ்யூவி கார்களை மீண்டும் சோதனை செய்யும் மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம், ஜூன் 8, 2021 மற்றும் ஜூன் 28, 2023க்கு இடையில் தயாரிக்கப்பட்ட XUV700 ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வாகனங்களின் (எஸ்யூவி) 1,08,306 யூனிட்களை ஆய்வு செய்வதாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18) தெரிவித்தது.

சரிவைச் சந்தித்து வரும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை, புதிய அறிக்கை

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் குறைக்கப்பட்டதன் காரணமாக, இந்தியாவில் அதன் விற்பனையும் தொடர்ந்து குறைந்து வருவதாகத் தங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது கேர் ரேட்டிங் நிறுவனம்.

செப்டம்பரில் வெளியாகிறது ராயல் என்ஃபீல்டின் அப்டேட் செய்யப்பட்ட புல்லட் 350

ராயல் என்ஃபீல்டின் அப்டேட் செய்யப்பட்ட புல்லட் 350 மாடாலனது அடுத்த மாதம் (செப்டம்பர்) வெளியாகவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

17 Aug 2023

சென்னை

சென்னையில் கட்டமைக்கப்படவிருக்கும் புதிய F4 ஸ்ட்ரீட் சர்க்யூட்

F4 ஸ்ட்ரீட் ரேசிங் பந்தையங்களை நடத்து வகையில் புதிய ஸ்ட்ரீட் ரேசிங் சர்க்யூட் ஒன்றைப் பெறவிருக்கிறது சென்னை. ஆம், கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் ஏற்கனவே இரண்டு ரேசிங் ட்ராக்குகள் இருக்கும் நிலையில், சென்னையில் புதிய ரேசிங் ட்ராக் ஒன்றும் அமைக்கப்படவிருக்கிறது.

எலெக்ட்ரிக் வாகன வெளியீட்டு டைம்லைனை பகிர்ந்து கொண்ட மஹிந்திரா

தென்னாப்பிரிக்காவின் தலைநகர் கேப் டவுன் நடைபெற்ற தங்களுடைய 'ப்யூச்சர்ஸ்கேப்' நிகழ்வில், குளோபல் பிக்-அப் மற்றும் எலெக்ட்ரிக் தார் கான்செப்டுகள் மட்டுமின்றி, அடுத்த சில ஆண்டுகளுக்கான தங்களுடைய எலெக்ட்ரிக் வாகன வெளியீட்டு டைம்லைனையும் பகிர்ந்திருக்கிறது மஹிந்திரா.

ஸ்கார்ப்பியோ N மாடலை அடிப்படையாகக் கொண்ட புதிய பிக்-அப் கான்செப்டை அறிமுகப்படுத்தியது மஹிந்திரா

தென்னாப்பிரிக்காவின் நேற்று நடைபெற்ற நிகழ்வில், கான்செப்ட் எலெக்ட்ரிக் தார் மாடலை மட்டுமல்லாது, இந்தியாவில் விற்பனையாகி வரும் ஸ்கார்ப்பியோ N மாடலை அடிப்படையாகக் கொண்ட பிக்-அப் கான்செப்ட் ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது மஹிந்திரா.

புதிய கான்செப்ட் எலெக்ட்ரிக் தார் (தார்.e) மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனத்திடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'தார்.e' கான்செப்ட் மாடல் நேற்று அறிமுகமாகியிருக்கிறது. இந்தியாவின் சுதந்திர நாளான நேற்று, தென்னாப்பிரிக்காவின் நடைபெற்ற நிகழ்வில், புதிய கார்களையும், தங்கள் எலெக்ட்ரிக் வாகன டைம்லைனையும் பகிர்ந்திருக்கிறது மஹிந்திரா.

15 Aug 2023

ஓலா

இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்தியிருக்கும் ஓலா

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்களுடைய ஃப்ளாக்ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான S1 ப்ரோவின் அப்டேட்டட் மாடலான 'S1 ப்ரோ ஜென் 2' மாடலை வெளியிட்டிருக்கிறது ஓலா. பவர்ஃபுல் இன்ஜின் மற்றும் கூடுதல் ரேஞ்சுடன் ஓலாவின் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்கூட்டர் வெளியாகியிருக்கிறது.

15 Aug 2023

கார்

சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி பயன்படுத்திய வாகனத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

இன்று இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் மோடி. முன்னதாக, ரேஞ்சு ரோவர் சென்டினல் எஸ்யூவியில் செங்கோட்டையில் வந்திறங்கினார் பிரதமர் மோடி.

14 Aug 2023

பைக்

ரெய்டர் 125 பைக்கின் சூப்பர் ஸ்குவாடு ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை அறிமுகப்படுத்திய டிவிஎஸ்

இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்து வரும் 125சிசி பைக்கான ரெய்டரின் சூப்பர் ஸ்குவாடு எடிஷனை வெளியிட்டிருக்கிறது. இந்தப் புதிய ஸ்பெஷல் எடிஷனின் கீழ் இரண்டு புதிய நிறங்களில் ரெய்டர் 125-ஐ வெளியிட்டிருக்கிறது டிவிஎஸ்.

அடுத்த மாதம் வெளியாகிறது சொகுசுக் கார் மாடலான 'ஆஸ்ட்ன் மார்டின் DB12'

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான ஆஸ்டன் மார்டின், தங்களுடைய விலையுயர்ந்த காரான DB11-ஐ இந்தியாவில் விற்பனை செய்து வந்தது. தற்போது அதற்கு மாற்றான, அப்டேட் செய்யப்பட்ட DB12 மாடலை அடுத்த மாதம் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

14 Aug 2023

ஹோண்டா

இந்தியாவில் வெளியானது ஹோண்டாவின் அப்டேட் செய்யப்பட்ட CD110 டிரீம் டீலக்ஸ்

இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட புதிய 'CD110 டிரீம் டீலக்ஸ்' கம்யூட்டர் பைக் மாடலை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. புதிய அப்டேட்களுடன், முந்தைய மாடலை விட ரூ.2,000 கூடுதல் விலையில் வெளியாகியிருக்கிறது புதிய CD110.

13 Aug 2023

ஹீரோ

ஆகஸ்ட் 29இல் புதிய தலைமுறை கரிஸ்மாவை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய தலைமுறை கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 மாடலின் அறிமுக தேதியை இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

ஒரு லட்சம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்தது டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து, புதிய சாதனை படைத்துள்ளது.

புதிய பைக் ஒன்றை வெளியிடவிருக்கும் டிவிஎஸ், RTR 310? அல்லது RTX?

வரும் செப்டம்பர்-6ம் தேதி புதிய பைக் ஒன்றை வெளியிடவிருக்கிறது டிவிஎஸ். அந்நிறுவனம் ஒரு பைக்கை வெளியிடுவதற்கு முன் அவ்வப்போது அதன் ஸ்பைஷாட் படங்கள் இணையத்தில் கசியும்.

11 Aug 2023

ஏத்தர்

புதிய 'ஏத்தர் 450S' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஏத்தர் எனர்ஜி

இந்தியாவில் 'ஏத்தர் 450S' என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது, பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம். இத்துடன், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஏத்தர் 450X-ன் இரண்டு அப்டேட்டட் வெர்ஷன்களையும் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

11 Aug 2023

கார்

'அர்பன் க்ரூஸர் டெய்ஸர்' என்ற புதிய மாடல் காரை வெளியிடுகிறதா டொயோட்டா?

இந்தியாவில் 'அர்பன் க்ரூஸர் டெய்ஸர்' (Urban Cruiser Taisor) என்ற கார் மாடல் பெயருக்கான டிரேட்மார்க்கிற்கு பதிவு செய்திருக்கிறது டொயோட்டா நிறுவனம். மாருதி சுஸூகி பிரெஸ்ஸாவின் மறுவடிவான அர்பன் க்ரூஸரை விற்னையை ஒன்பது மாதங்களுக்கு முன்பு நிறுத்தியது டொயோட்டா.

XUV300 மாடலின் இரண்டு புதிய வேரியன்ட்களை வெளியிட்டுள்ளது மஹிந்திரா

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் XUV300 காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் இரண்டு புதிய வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது, மஹிந்திரா நிறுவனம்.

மீண்டும் இந்தியாவில் செயல்பாட்டிற்கு வருகிறதா ஃபியட்?

ஜீப் மற்றும் சிட்ரன் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனமான ஸ்டெல்லான்டிஸ் நிறுவனமானது, முன்பு இந்தியாவில் செயல்பாடுகளைக் கொண்டிருந்த தங்களது மற்றொரு நிறுவனமான ஃபியட்டினை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிட்டு வருகிறது.

10 Aug 2023

மாருதி

புதிய ரூமியான் எம்பிவி மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது டொயோட்டா

புதிய ரூமியான் கார் மாடலை டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் வெளியிடவிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியாகி வந்த நிலையில், இந்தியாவிற்கான ரூமியானை தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது டொயோட்டா.

டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்டு ரோவரின் புதிய எலெக்ட்ரிக் வாகனத் திட்டம்

அடுத்த ஏழு ஆண்டுகளில் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பிற்கான புதிய இலக்குகளை நிர்ணயித்திருக்கிறது டாடா மோட்டார்ஸ் மற்றும் அதன் கீழ் செயல்படும் ஜாகுவார் லேண்டு ரோவர்.

இந்தியாவில் வெளியானது மெர்சிடீஸ் பென்ஸ் இரண்டாம் தலைமுறை GLC 

இந்தியாவில் தங்களது இரண்டாம் தலைமுறை GLC மாடலை, இரண்டு வேரியன்ட்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். பெட்ரோல் இன்ஜின் கொண்ட ஒரு வேரியன்டையும், டீசல் இன்ஜின் கொண்ட ஒரு வேரியன்டையும் வெளியிட்டிருக்கிறது மெர்சிடீஸ்.

08 Aug 2023

ஹோண்டா

இந்தியாவில் தங்களுடைய 160சிசி லைன்அப்பில் புதிய SP160 மாடலை வெளியிட்டிருக்கும் ஹோண்டா

தங்களுடைய 160சிசி லைன்அப்பில் மூன்றாவதாக புதிய மாடல் பைக் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா. ஏற்கனவே எக்ஸ்பிளேடு மற்றும் யூனிகார்ன் ஆகிய கம்யூட்டர் பைக் மாடல்களை இந்தியாவில் ஹோண்டா விற்பனை செய்து வரும் நிலையில், SP160 என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.

ரூ.25 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியானது புதிய டுகாட்டி டியாவெல் V4

இத்தாலியைச் சேர்ந்த ப்ரீமியம் பைக் தயாரிப்பாளரான டுகாட்டி நிறுவனம், இந்தியாவில் தங்களுடைய புதிய பைக் மாடல் ஒன்றை வெளியிட்டிருப்பதோடு, மற்றொரு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.

க்ரெட்டா மற்றும் அல்கஸார் அட்வென்சர் எடிஷன் மாடல்களை வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய்

தங்களுடைய க்ரெட்டா மற்றும் அல்கஸார் கார் மாடல்களின் அட்வென்சர் எடிஷன்களை வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய். க்ரெட்டா மாடலானது ஏற்கனவே, நைட் எடிஷன் ஒன்றைப் பெற்றிருக்கும் நிலையில், அல்கஸாருக்கு இதுவே முதல் சிறப்பு எடிஷன் மாடலாகும்.

07 Aug 2023

மாருதி

ஆண்டுக்கு 40 லட்சம் வாகன உற்பத்தி இலக்கை நிர்ணயித்திருக்கும் மாருதி சுஸூகி

'மாருதி சுஸூகி 3.0' என்ற தங்களுடைய புதிய திட்டம் குறித்து பகிர்ந்திருக்கிறது, இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி. இந்தத் திட்டத்தின் கீழ், 2030-31 நிதியாண்டிற்குள் 15 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருக்கிறது அந்நிறுவனம்.

2026க்குள் ஐந்து மின்சார எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டம்

டிசம்பர் 2024 இல் தொடங்கி அக்டோபர் 2026க்குள் ஐந்து எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

05 Aug 2023

கார்

ஆகஸ்ட் மாத அசத்தல் ஆஃபர்; கார்களுக்கு அதிகபட்ச தள்ளுபடியை அறிவித்தது ரெனால்ட் நிறுவனம்

ரெனால்ட் நிறுவனம் இந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் தனது அனைத்து வகையான கார்களுக்கும் சலுகைகளை அறிவித்துள்ளது.

பன்ச் CNG மாடலை இந்தியாவில் வெளியிட்டது டாடா

இந்தியாவில் தங்களுடைய CNG லைன்-அப்பில் டியாகோ, டிகோர் மற்றும் ஆல்ட்ராஸூக்கு அடுத்தபடியாக, நான்காவது கார் மாடலாக பன்ச் CNG மாடலை வெளியிட்டிருக்கிறது டாடா.

04 Aug 2023

கார்

ரூ.3.14 லட்சம் வரை மெரிடியன் மாடலின் விலையை உயர்த்தி ஜீப்

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் மெரிடியன் மற்றும் காம்பஸ் கார் மாடல்களின் விலையை உயர்த்தியிருக்கிறது அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஜீப்.

புதிய 450சிசி பவர் க்ரூஸர் ஒன்றை உருவாக்கி வரும் ராயல் என்ஃபீல்டு 

டுகாட்டி டியாவெல் மாடலைப் போலவே புதிய பைக் பவர் க்ரூஸர் மாடல் ஒன்றை, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உருவாக்கி வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த புதிய மாடலை 2025-ம் ஆண்டிற்குள் இந்தியா மற்றும் பிற உலக நாடுகளில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

03 Aug 2023

டெஸ்லா

இந்தியாவில் புதிய அலுவலகத்தை அமைக்கும் டெஸ்லா, இந்தியாவில் அதன் திட்டம் என்ன?

கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடியை, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் சந்தித்த பின்பு, கடந்த வாரம் டெஸ்லா நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இந்தியாவில், மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியுஷ் கோயலைக் சந்தித்துச் சென்றிருக்கிறார்கள்.

X440 பைக்கின் விலையை உயர்த்தி அறிவித்திருக்கும் ஹார்லி டேவிட்சன்

கடந்த மாதத் தொடக்கத்தில் இந்தியாவின் தொடக்கநிலை ப்ரீமியம் பைக் பிரிவில், தங்களுடைய முதல் பைக்கான X440-யை அறிமுகப்படுத்தியது அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரீமியம் பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன்.

02 Aug 2023

சீனா

சீனாவின் BYD ஆட்டோமொபைல் நிறுவனத்தின் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு

இந்தியாவில் வணிக நிறுவனங்களுக்கான எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனை செய்து வரும் சீன நிறுவனமான BYD மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன.

'Legend' சரவணனின் கார் கலெக்ஷனைப் பற்றித் தெரியுமா?

தமிழகத்தின் மிகவும் பிரபலமான ஜவுளி நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் 'Legend' சரவணனைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கடந்த வருடம் 'லெஜண்ட்' என்ற தமிழ்த் திரைப்படம் ஒன்றிலும் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.