ஆட்டோ செய்தி
ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.
14 Jul 2023
ஹோண்டாஇந்தியாவில் வெளியானது ஹோண்டா டியோ 125 மாடல் ஸ்கூட்டர்
தங்களுடைய புதிய டியோ 125 ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட்டது ஹோண்டா. தற்போது இந்தியாவில், சிறிய 110சிசி இன்ஜின் கொண்ட ஹோண்டா டியோவே விற்பனையில் இருக்கும் நிலையில், தற்போது அதனை விட சற்று அதிக சிசி கொண்ட டியோவை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா.
14 Jul 2023
ப்ரீமியம் பைக்ஸ்பீடு 400 பைக்கின் ஆன்-ரோடு விலை குறித்த அறிவிப்பை வெளியிட்டது ட்ரையம்ப்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் தங்களுடைய புதிய என்ட்ரி-லெவல் ப்ரீமியம் பைக்கான ஸ்பீடு 400 பைக்கை வெளியிட்டது ட்ரையம்ப் நிறுவனம்.
14 Jul 2023
மஹிந்திராமஹிந்திரா ஸ்கார்ப்பியோ கிளாஸிக் மாடல் கார்களை வாங்கத் திட்டமிட்டிருக்கும் இந்திய ராணுவம்
இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திராவிடம் புதிதாக 1,850 கார்களை வாங்கத் திட்டமிட்டிருக்கிறது இந்திய ராணுவம்.
11 Jul 2023
ஏத்தர்விலை குறைவான 450S எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடவிருக்கும் ஏத்தர்
கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு வழங்கும் மானியத்தைக் குறைத்திருக்கிறது மத்திய அரசு. இதனைத் தொடர்ந்து, எலெக்ட்ரிக் பைக்குகளின் விலை முன்பை விட ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை கூடுதலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
11 Jul 2023
ப்ரீமியம் பைக்நார்டான் பிராண்டிங்கின் கீழ் புதிய பைக் பெயரை பதிவு செய்திருக்கும் டிவிஎஸ்
பிரிட்டனைச் சேர்ந்த முன்னணி ப்ரீமியம் பைக் தயாரிப்பு நிறுவனமான நார்டான் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தைக் கடந்த 2020-ம் ஆண்டு கையகப்படுத்தியது டிவிஎஸ் நிறுவனம்.
11 Jul 2023
ஹூண்டாய்புதிய 'எக்ஸ்டர்' மைக்ரோ எஸ்யூவி மாடலை இந்தியாவில் வெளியிட்டது ஹூண்டாய்
தங்களுடைய புதிய விலை குறைவான சிறிய எஸ்யூவியானை எக்ஸ்டரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய். தங்களது இந்திய எஸ்யூவி லைன்-அப்பில் வென்யூவிற்கும் சற்று கீழே இந்த புதிய எஸ்யூவியை ப்ளேஸ் செய்திருக்கிறது ஹூண்டாய்.
10 Jul 2023
ப்ரீமியம் பைக்தங்கள் பைக் மாடல்களுக்கு புதிய பெயின்ட் ஸ்கீம்களை அறிமுகப்படுத்திய ட்ரையம்ப்
இந்தியாவில் தொடக்க நிலை ப்ரீமியம் பைக் செக்மெண்டில் தங்களுடைய புதிய மாடலான ஸ்பீடு 400 பைக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வெளியிட்டது ட்ரையம்ப். இந்நிலையில், தற்போது இந்தியாவில் விற்பனை செய்து வரும் தங்களுடைய மற்ற பைக் மாடல்களுக்கு புதிய அப்டேட் ஒன்றைக் கொடுத்திருக்கிறது ட்ரையம்ப்.
10 Jul 2023
மஹிந்திராரூ.30,000 வரை சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மஹிந்திரா தார்
இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் 3-டோர் தாரின் விலையை சமீபத்தில் தான் ரூ.1 லட்சம் வரை உயர்த்தியது மஹிந்திரா நிறுவனம்.
10 Jul 2023
ஜாவாசென்னை எழும்பூரில் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட ஜாவா தின நிகழ்வு
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் இரண்டாவது ஞாயிறு, உலக ஜாவா மோட்டார்சைக்கிள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
09 Jul 2023
ராயல் என்ஃபீல்டுஹார்லி டேவிட்சன் மற்றும் ட்ரையம்ப்புக்குப் எதிராக என்ன திட்டம் வைத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு?
இந்தியாவின் என்ட்ரி-லெவல் ப்ரீமியம் செகமண்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனமே கோலோச்சி வந்தது. ஹார்லி டேவிட்சன் மற்றும் ட்ரையம்ப் நிறுவனங்களின் வருகை, அந்நிறுவனத்திற்கு சற்றே போட்டியை அதிகரித்திருக்கிறது.
09 Jul 2023
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் டிவிஎஸ் நிறுவனம்
புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் குறித்த டீசர் ஒன்றை வெளியிட்டிருக்கிறது டிவிஎஸ் நிறுவனம். அடுத்த ஆகஸ்ட் 23 அன்று துபாயில் புதிய அறிமுகம் ஒன்றை செய்யவிருப்பதாக அந்த டீசரில் குறிப்பிட்டிருக்கிறது டிவிஎஸ்.
09 Jul 2023
ப்ரீமியம் பைக்வெளியான மூன்றே நாட்களில் 10,000 புக்கிங்குகளைக் கடந்த 'ட்ரையம்ப் ஸ்பீடு 400'
கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவின் என்ட்ரி-லெவல் ப்ரீமியம் பைக் செக்மண்டில் புதிய ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 400 ஆகிய பைக்குகளை அறிமுகப்படுத்தியது ட்ரையம்ப்.
09 Jul 2023
மாருதிநெக்ஸா லைன்-அப் மாடல்களுக்கு சலுகைகளை அறிவித்திருக்கும் மாருதி
மாருதி சுஸூகி நிறுவனம் தங்களுடைய இக்னிஸ், பெலினோ மற்றும் சியாஸ் ஆகிய குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு மட்டும் ஜூலை மாத்திற்கான சலுகையாக சில சலுகைகளை அறிவித்திருக்கிறது.
08 Jul 2023
புதிய கார்மாருதியின் எர்டிகாவை 'ரூமியான்' என்ற பெயரில் வெளியிடவிருக்கும் டொயோட்டா
டொயோட்டாவின் இன்னோவா ஹைகிராஸை, ரீபேட்ஜ் செய்து இன்விக்டோவாக மாருதி சுஸூகி கடந்த வாரம் அறிமுகம் செய்தது. தற்போது மாருதியின் எர்டிகா எம்பிவியை, ரூமியான் வடிவில் இந்தியாவில் ரீபேட்ஜ் செய்து டொயோட்டா வெளியிடவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
08 Jul 2023
ராயல் என்ஃபீல்டுஇந்தியாவில் புதிய 440சிசி பைக்கை வெளியிடத் திட்டமிட்டு வரும் ராயல் என்ஃபீல்டு
இந்தியாவில் 411சிசி இன்ஜினைக் கொண்ட ஸ்கிராம் 411 பைக் மாடலை விற்பனை செய்து வருகிறது ராயல் என்ஃபீல்டு. இந்நிலையில், 440சிசி இன்ஜினைக் கொண்ட புதிய ஸ்கிராம் பைக் ஒன்றை அந்நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
05 Jul 2023
பைக்இந்தியாவில் வெளியானது ட்ரையம்பின் தொடக்க நிலை மாடலான 'ஸ்பீடு 400' பைக்
கடந்த வாரம் தான் இந்தியாவில் தங்களது புதிய 400சிசி பைக்குகளான ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்லர் 400X ஆகிய பைக்குகளை அறிமுகப்படுத்தியது ட்ரையம்ப் நிறுவனம்.
05 Jul 2023
மாருதிஇந்தியாவில் வெளியானது மாருதியின் ஃப்ளாக்ஷிப் மாடலான 'இன்விக்டோ'
இந்தியாவில் தங்களுடைய புதிய ஃப்ளாக்ஷிப் மாடலான இன்விக்டோ எம்பிவியை இன்று வெளியிட்டிருக்கிறது, மாருதி சுஸூகி. கடந்த ஆண்டு வெளியான டொயோட்டா இன்னோவா ஹைகிராஸின் ரீபேட்ஜ்டு வெர்ஷனாகவே இந்த இன்விக்டோவை வெளியிட்டிருக்கிறது மாருதி நிறுவனம்.
05 Jul 2023
மஹிந்திராமஹிந்திரா தார் ஜீப்பை ஸ்டைலாக ஓட்டும் அமிதாப் பச்சன்; வைரலாகும் வீடியோ
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல்களில், வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் மாடலாக இருந்து வருகிறது, மஹிந்திரா தார்.
05 Jul 2023
கியாதங்களுடைய ப்ரீமியம் எலெக்ட்ரிக் காரான EV9-யும் இந்தியாவிற்குக் கொண்டு வரும் கியா
தென்கொரியாவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான கியா, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் தங்களுடைய முன்னணி எஸ்யூவி மாடலான செல்டோஸின் ஃபேஸ்லிப்ட் மாடலை நேற்று (ஜூலை 4) அறிமுகப்படுத்தியது.
04 Jul 2023
ஹீரோஹார்லி டேவிட்சன் X440-யின் இன்ஜினுடன் புதிய 440சிசி பைக்கை உருவாக்கும் ஹீரோ
நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு நேற்று இந்தியாவில் வெளியானது ஹார்லி டேவிட்சனின் X440 பைக். இந்த புதிய பைக்கை ஹீரோ நிறுவனத்துடன் இணைந்தே ஹார்லி டேவிட்சன் உருவாக்கியிருந்தது.
04 Jul 2023
கியாஇந்தியாவில் கியா செல்டோஸின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை அறிமுகம் செய்தது கியா
தங்களுடைய எஸ்யூவி லைன்அப்பில் முக்கியமான மாடலான செல்டோஸின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது கியா.
03 Jul 2023
ஹார்லி டேவிட்சன்இந்தியாவில் வெளியானது ஹார்லி டேவிட்சனின் புதிய X440 பைக்
நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு இறுதியாக தங்களுடைய புதிய X440 பைக்கை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரீமியம் பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன்.
03 Jul 2023
ஸ்கோடாகுஷாக் எஸ்யூவியின் மேட் எடிஷன் மாடலை வெளியிட்டது ஸ்கோடா
இந்தியாவில் தங்களது குஷாக் எஸ்யூவியின் மேட் எடிஷனை வெளியிட்டிருக்கிறது ஸ்கோடா நிறுவனம். குஷாக் மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தி விரைவில் இரண்டு ஆண்டுகள் நிறைவடையவிருப்பதை அடுத்து இந்த குஷாக் மேட் எடிஷனை வெளியிட்டிருக்கிறது ஸ்கோடா.
03 Jul 2023
ஹூண்டாய்புதிய க்ரெட்டா மற்றும் டூஸான் ஃபேஸ்லிப்ட் மாடல்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் ஹூண்டாய்
தங்களுடைய டூஸான் மற்றும் க்ரெட்டா ஆகிய மாடல்களின் ஃபேஸ்லிப்ட் மாடல்களை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது ஹூண்டாய்.
02 Jul 2023
எலக்ட்ரிக் கார்ஐரோப்பாவில் புதிய எலெக்ட்ரிக் காரின் மாதிரியை சோதனை செய்து வரும் மாருதி
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் eVX என்ற எலெக்ட்ரிக் கான்செப்ட் காரை காட்சிப்படுத்தியிருந்தது மாருதி சுஸூகி நிறுவனம்.
02 Jul 2023
செடான்இந்தியாவில் அடுத்து வெளியாகவிருக்கும் செடான்கள்
தற்போது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யூவிக்களே அதிகம் ஆக்கிரமித்திருந்தாலும், சில கார் நிறுவனங்கள் தங்களது அப்டேட் செய்யப்பட்ட செடான்களையும் வெளியிடவிருக்கின்றன. அடுத்து வெளியாகவிருக்கும் செடான் மாடல்கள் என்னென்ன?
01 Jul 2023
இந்தியாகுளோபல் NCAP-க்கு நிகராக அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படவிருக்கும் இந்தியாவிற்கான பாரத் NCAP
குளோபல் NCAP-ஐ போலவே, இந்தியாவிற்கான பாரத் NCAP பாதுகாப்பு சோதனையானது வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
01 Jul 2023
ராயல் என்ஃபீல்டு2025-ல் 750சிசி பைக்குகள் அறிமுகம், புதிய திட்டத்தில் ராயல் என்ஃபீல்டு
350சிசி, 450சிசி மற்றும் 650சிசி பைக்குகளையடுத்து 750சிசி பைக்குகளையும் தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.
01 Jul 2023
தமிழ்நாடுபேட்டரி மற்றும் எத்தனாலில் இயங்கும் சரக்கு வாகனங்களுக்கு கட்டணமில்லா அனுமதிச் சீட்டு
பேட்டரி, மெத்தனால் மற்றும் எத்தனாலில் இயங்கும் சரக்கு வாகனங்களுக்கு கட்டணமில்லா அனுமதிச் சீட்டு வழங்கப்படும் எனக் கூறி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.
01 Jul 2023
கார்ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் புதிய கார்கள்
கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்:
28 Jun 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்மானியம் குறைக்கப்பட்டதை அடுத்து விழ்ச்சியடைந்த எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனை
எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு வழங்கி வந்த மானியத்தை குறைக்கவிருப்பதாகக் கடந்த மாதம் அறிவித்தது மத்திய அரசு. அதனைத் தொடர்ந்து ஜூன் 1-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் டூவீலர்களின் மானியமும் குறைக்கப்பட்டது.
28 Jun 2023
ஹோண்டா3 கோடி விற்பனை மைல்கல்லை எட்டி சாதனை படைத்த ஹோண்டா ஆக்டிவா
இந்தியாவில் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் மிகவும் நம்பகமான ஸ்கூட்டராக வலம் வருவது ஹோண்டா ஆக்டிவா தான். தற்போது, விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது ஆக்டிவா ஸ்கூட்டர்.
28 Jun 2023
பஜாஜ்பஜாஜூடன் கூட்டணி அமைத்து இந்தியாவில் புதிய பைக் மாடல்களை அறிமுகப்படுத்தியது ட்ரையம்ப்
இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து புதிய பைக் மாடல்களை வெளியிடத் திட்டமிட்டு வந்தது ட்ரையம்ப் நிறுவனம். தற்போது, இந்தக் கூட்டணியின் கீழ் இரண்டு புதிய பைக்குகளை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
27 Jun 2023
மஹிந்திராஆகஸ்ட் மாதம் 5-டோர் தாரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் மஹிந்திரா
இந்த மாதத் தொடக்கத்தில் தங்களுடைய புதிய ஆஃப்ரோடு எஸ்யூவியான 5-டோர் ஜிம்னியை இந்தியாவில் வெளியிட்டது மாருதி சுஸூகி.
27 Jun 2023
கியா30,000 கேரன்ஸ் மாடல் கார்களை திரும்பப்பெறும் கியா
தென் கொரியாவைச் சேர்ந்த வாகனத் தயாரிப்பு நிறுவனமான கியா, இந்தியாவில் தங்களது கேரன்ஸ் மாடலை திரும்பப்பெறுகிறது.
27 Jun 2023
யமஹாமீண்டும் RX பெயரில் புதிய பைக்கை உருவாக்கத் திட்டமிடும் யமஹா
உலகளவில் பைக் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் பைக்காக இருந்தது யமஹாவின் RX100 மாடல் பைக். ஆனால், தொழில்நுட்ப வளர வளர டூ ஸ்ட்ரோக் இன்ஜின்கள் கொஞ்சம் கொஞ்சமாக விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டு, அதன் இடத்தை ஃபோர் ஸ்ட்ரோக் இன்ஜின்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கின.
26 Jun 2023
பைக்'அப்பாச்சி RTX' என்ற புதிய பெயரை டிரேட்மார்க் செய்த டிவிஎஸ் நிறுவனம்
தற்போது அப்பாச்சி பிராண்டிங்கின் கீழ் இந்தியாவில் ஆறு பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது டிவிஎஸ் நிறுவனம்.
26 Jun 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க டெல்லி அரசின் புதிய திட்டம்
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் குறைப்பதற்கு எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகமாக ஊக்குவிக்கிறது அம்மாநில அரசு. புதிதாக எலெக்ட்ரிக் வானங்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, அதன் ரேஞ்சே முக்கியமான தடைக்கல்லாக இருக்கிறது.
25 Jun 2023
அட்வென்சர் பைக்ரூ.3 லட்சம் விலைக்குள் விற்பனை செய்யப்படும் அட்வென்சர் பைக்குகள்- பகுதி 2
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்:
25 Jun 2023
அட்வென்சர் பைக்ரூ.3 லட்சம் விலைக்குள் விற்பனை செய்யப்படும் அட்வென்சர் பைக்குகள்- பகுதி 1
அட்வென்சர் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. இந்தியாவில் ரூ.3 லட்சம் விலைக்குள் விற்பனையாகி வரும் அட்வென்சர் பைக்குகள் இவை.