இந்தியாவில் வெளியானது ஹார்லி டேவிட்சனின் புதிய X440 பைக்
நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு இறுதியாக தங்களுடைய புதிய X440 பைக்கை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரீமியம் பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன். இந்தியாவைச் சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் சேர்ந்து இந்த பைக்கை தயாரித்து விற்பனை செய்யவிருக்கிறது ஹார்லி டேவிட்சன். டெனிம், விவிட் மற்றும் பினாக்கிள் என மூன்று வேரியன்ட்களில் புதிய பைக்கை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். முன்பக்கம் USD போர்க்ஸ், பின்பக்கம் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி ஸ்டாண்டர்டாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 300சிசி - 400சிசி வரையிலான செக்மெண்டில் உள்ள பைக்குகளுடன் போட்டியிடும் வகையில் இந்த புதிய X440 மாடல் பைக்கை வெளியிட்டிருக்கிறது ஹார்லி டேவிட்சன்.
ஹார்லி டேவிட்சன் X440: இன்ஜின் மற்றும் விலை
இந்த புதிய X440 பைக்கில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸூடன் இணைக்கப்பட்ட, 27hp பவர் மற்றம் 38Nm டார்க்கை உற்பத்தி செய்யும் வகையிலான, சிங்கிள் சிலிண்டர் கொண்ட, ஆயில்-கூல்டு 440சிசி இன்ஜினைக் கொடுத்திருக்கிறது ஹார்லி. TFT டிஸ்பிளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் நோட்டிபிகேஷன் அலர்ட் ஆகிய அம்சங்களையும் இந்த புதிய X440-யில் கொடுத்திருக்கிறது அந்நிறுவனம். இந்தியாவில் மூன்று வேரியன்ட்களாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் X440-யின் அடிப்படை வேரியன்ட்டான டெனிம், ரூ.2.29 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவிருக்கிறது. மிடில் வேரின்ட்டான விவிட், ரூ.2.49 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், டாப் எண்டான S வேரியன்ட், ரூ.2.69 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 350-யை விட ரூ.35,000 கூடுதலான விலையில் அறிமுகமாகியிருக்கிறது X440.