ரூ.3 லட்சம் விலைக்குள் விற்பனை செய்யப்படும் அட்வென்சர் பைக்குகள்- பகுதி 2
செய்தி முன்னோட்டம்
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்:
விலை: ரூ.2.16 லட்சம்
தொடக்க நிலை அட்வென்சர் டூரிங் செக்மண்டில், திறன் மிகுந்த ஆல்ரவுண்டர் என்றால் அது ஹிமாலயன் தான். இந்த செக்மண்டையே ஹிமாலயன் முன்னெடுத்துச் செல்ல, மற்ற பைக்குகள் பின்னால் அணிவகுத்து நிற்கின்றன. அதிக டார்க் கொண்ட இன்ஜின், 200மிமீ கிரௌண்டு கிளியரன்ஸ் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள்.
யெஸ்டி அட்வென்சர்:
விலை: ரூ.2.15 லட்சம்
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயனுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரே அட்வென்சர் பைக் இந்த யெஸ்டி அட்வென்சர். ஆஃப் ரோடிங், டூரிங் மற்றும் கம்யூட்டிங் என அனைத்து வகையிலும் ஹிமாலயனுடன் சரிசமமாக போட்டியிடக் கூடிய ஒரே பைக் இந்த யெட்டி அட்வென்சர் தான், விலையிலும் கூட.
அட்வென்சர் பைக்
கேடிஎம் 250 அட்வென்சர்:
விலை: ரூ.2.44 லட்சம்
கேடிஎம் நிறுவனத்தின் விலை குறைந்த அட்வென்சர் பைக் இந்த கேடிஎம் 250 அட்வென்சர். அதிக திறன் கொண்ட இன்ஜின் மற்றும் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய கேடிஎம்ஸ 390 அட்வென்சர், கண்டிப்பாக அனைவரும் வாங்கும் விலையில் இல்லை. எனவே, அதன் பெர்ஃபாமன்ஸை கொஞ்சம் அளிக்கக்கூடிய வகையில் தொடக்க நிலை அட்வென்சர் பைக்காக இந்த 250 அட்வென்சரை விற்பனை செய்து வருகிறது கேடிஎம்.
பெனல்லி TRK 251:
விலை: ரூ.2.51 லட்சம்
பெனல்லி நிறுவனத்தின் விலை குறைந்த, அட்வென்சர் போர்வையில் இருக்கும் ஸ்ட்ரீட் பைக் இந்த TRK 251. சிறந்த ஆஃப்ரோடிங் திறன் இல்லையென்றாலும், ஒரு டூரராக சிறந்த பெர்ஃபாமன்ஸைக் கொடுக்கக்கூடிய பைக் இந்த TRK 251.