
புதிய 'எக்ஸ்டர்' மைக்ரோ எஸ்யூவி மாடலை இந்தியாவில் வெளியிட்டது ஹூண்டாய்
செய்தி முன்னோட்டம்
தங்களுடைய புதிய விலை குறைவான சிறிய எஸ்யூவியானை எக்ஸ்டரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய். தங்களது இந்திய எஸ்யூவி லைன்-அப்பில் வென்யூவிற்கும் சற்று கீழே இந்த புதிய எஸ்யூவியை ப்ளேஸ் செய்திருக்கிறது ஹூண்டாய்.
கிராண்டு i10 நியாஸ் மற்றும் ஆராவின் கட்டுமானத்திலேயே இந்த எஸ்க்டரும் உருவாக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மற்றும் CNG எரிபொருள் ஆப்ஷன்களில், ஐந்து ட்ரிம்களில் இந்த புதிய எஸ்யூவியை வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய்.
EX, S, SX, SX(O), SX(O) Connect என ஐந்து ட்ரிம்களாக வெளியாகியிருக்கிறது புதிய எக்ஸ்டர். EX ட்ரிம்மிள் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டிருக்கும் நிலையில், பிற ட்ரிம்களில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுமே வழங்கப்பட்டிருக்கின்றன.
ஹூண்டாய்
ஹூண்டாய் எக்ஸ்டர்: இன்ஜின் மற்றும் விலை
வென்யூ, நியாஸ் மற்றும் i20 ஆகிய மாடல்களில் பயன்படுத்தப்பட்ட, நான்கு சிலிண்டர்கள் கொண்ட, 83hp பவர் மற்றும் 114Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினையே எக்ஸ்டரிலும் பயன்படுத்தியிருக்கிறது ஹூண்டாய்.
இந்த இன்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன.
அடிப்படையான EX ட்ரிம்மை ரூ.6 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய். S ட்ரிம்மின் மேனுவல் வேரியன்ட் ரூ.7.27 லட்சம் விலையிலும், ஆட்டோமேட்டிக் வேரியன்ட் ரூ.7.97 லட்சம் விலையிலும் வெளியாகியிருக்கிறது.
டாப் எண்டான SX(O) Connect வேரியன்டானது, மேனுவல் கியர்பாக்ஸூடன் ரூ.9.32 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸூடன் ரூ.10 லட்சம் விலையிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.