
இந்தியாவில் அடுத்து வெளியாகவிருக்கும் செடான்கள்
செய்தி முன்னோட்டம்
தற்போது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யூவிக்களே அதிகம் ஆக்கிரமித்திருந்தாலும், சில கார் நிறுவனங்கள் தங்களது அப்டேட் செய்யப்பட்ட செடான்களையும் வெளியிடவிருக்கின்றன. அடுத்து வெளியாகவிருக்கும் செடான் மாடல்கள் என்னென்ன?
ஹோண்டா அமேஸ்:
மறுவடிவமைப்பு செய்யப்பட்ட அடுத்த தலைமுறை அமேஸ் மாடலை அடுத்த ஆண்டு விற்பனைக்குக் கொண்டு வருவிருக்கிறது ஹோண்டா.
இன்ஜினில் எந்த மாற்றமும் இன்றி, வெளிப்பக்கமும், உள்பக்கமும் டிசைனில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படவிருக்கிறது புதிய அமேஸ்.
மாருதி சுஸூகி டிசையர்:
அப்டேட் செய்யப்பட்ட புதிய டிசையரை அடுத்த ஆண்டு மாருதி வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த மாடலில் புதிய 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் ஸ்ட்ராங் ஹைபிரிட் மாடலாக மாருதி நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கார்கள்
ஹூண்டாய் வெர்னா N லைன்:
தங்களுடைய புதிய கார்களை வெளியிட்ட பிறகு அதன் 'N லைன்' வேரியன்ட் ஒன்றை ஹண்டாய் வெளியிடுவது வழக்கம்.
அதேபோல், இப்போதும் புதிய வெர்னாவின் N லைன் வேரியன்ட் ஒன்றை வெளியிடவிருக்கிறது ஹூண்டாய். N லைனின் டிசைன் அம்சங்களுடன், இன்ஜினில் எந்த மாற்றமும் இன்றி இந்த புதிய வெர்னா N லைன் வேரியன்ட் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்கோடா சூப்பர்ப்:
BS6 இரண்டாம் கட்ட மாசுக்காட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலான் பின்பு இந்தியாவில் சூப்பர்ப் மாடலின் விற்பனையை நிறுத்தியது ஸ்கோடா. ஆனால், சர்வதேச சந்தையில் அதன் நான்காம் தலைமுறை மாடலை அறிமுகப்படுத்தவிருக்கிறது.
எனவே, சர்வதேச வெளியீட்டைத் தொடர்ந்து இந்தியாவிலும் அந்த மாடல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.