NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / பஜாஜூடன் கூட்டணி அமைத்து இந்தியாவில் புதிய பைக் மாடல்களை அறிமுகப்படுத்தியது ட்ரையம்ப்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பஜாஜூடன் கூட்டணி அமைத்து இந்தியாவில் புதிய பைக் மாடல்களை அறிமுகப்படுத்தியது ட்ரையம்ப்
    இந்தியாவில் இரண்டு புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தியது ட்ரையம்ப்

    பஜாஜூடன் கூட்டணி அமைத்து இந்தியாவில் புதிய பைக் மாடல்களை அறிமுகப்படுத்தியது ட்ரையம்ப்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 28, 2023
    10:06 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து புதிய பைக் மாடல்களை வெளியிடத் திட்டமிட்டு வந்தது ட்ரையம்ப் நிறுவனம். தற்போது, இந்தக் கூட்டணியின் கீழ் இரண்டு புதிய பைக்குகளை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

    தற்போது ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்லர் 400 X ஆகிய இரண்டு பைக் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ட்ரையம்ப்.

    தங்களுடைய ப்ரீமியம் பைக் மாடல்களான 'ஸ்பீடு ட்வின் 900' மாடலை அடிப்படையாகக் கொண்டு ஸ்பீடு 400 மாடலையும், 'ஸ்கிராம்ப்லர் 900' மாடலை அடிப்படையாகக் கொண்டு ஸ்கிராம்ப்லர் 400 X மாடலையும் வடிவமைத்திருக்கிறது ட்ரையம்ப்.

    இந்த பைக்குகளின் டிசைன் மற்றும் வடிவமைப்பை ட்ரையம்ப் மேற்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் அதன் தயாரிப்பு மற்றும் விற்பனையை மேற்கொள்ளவிருக்கிறது பஜாஜ்.

    ட்ரையம்ப்

    இன்ஜின் மற்றும் பிற வசதிகள்: 

    இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த பைக்குகளில் பயன்படுத்துவதற்காகவே புதிய இன்ஜின் ஒன்றை உருவாக்கியிருக்கிறது ட்ரையம்ப்.

    40hp பவர் மற்றும் 37.5Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, சிங்கிள் சிலிண்டர் கொண்ட 398சிசி TR-சீரிஸ் இன்ஜினை இந்த பைக்குகளில் பயன்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். மேலும், இந்த இன்ஜினுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸையும் அந்நிறுவனம் கொடுத்திருக்கிறது.

    வரும் ஜூலை 5-ம் தேதி இந்த இரண்டு பைக்குகளையும் இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ட்ரையம்ப். இதன் விலை குறித்த அறிவிப்புகளையும் அன்றைய தேதியிலேயே அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரூ.3 லட்சம் அல்லது அதனையொட்டிய விலையில் ஸ்பீடு 400 மாடலையும், அதனை விட கொஞ்சம் கூடுதலான விலையில் ஸ்கிராம்ப்லர் 400 X மாடலையும் ட்ரையம்ப் நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பஜாஜ்
    பைக்
    ப்ரீமியம் பைக்

    சமீபத்திய

    பென்ட்லியின் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி வெளியாகியுள்ளது: விவரங்கள் இதோ எஸ்யூவி
    வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மத்திய அரசின் வெப்சைட் இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது வக்ஃப் வாரியம்
    தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    பஜாஜ்

    பஜாஜ் ஆட்டோ... காலாண்டு முடிவுகள் எப்படி இருக்கும்?  பங்குச் சந்தை
    மீண்டும் வருகிறது 'அவெஞ்சர் 220 ஸ்ட்ரீட்'.. பஜாஜின் திட்டம் என்ன? பைக்

    பைக்

    சென்னையில் மீண்டும் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் - 16 பைக்குகள் பறிமுதல்  சென்னை
    எப்படி இருக்கிறது ஹீரோவின் எக்ஸ்பல்ஸ் 200T 4V: ரிவ்யூ  ஆட்டோமொபைல்
    கடந்த மாதம் வெளியான பைக்குகள் என்னென்ன? ஒரு குட்டி ரீகேப்!  பைக் நிறுவனங்கள்
    புதிய '390 அட்வென்சர் V' பைக்கை இந்தியாவில் வெளியிட்டது கேடிஎம்.. விலை என்ன? கேடிஎம்

    ப்ரீமியம் பைக்

    இந்த ஆண்டு இந்தியாவில் வெளியாகவிருக்கும் தொடக்கநிலை ப்ரீமியம் பைக்குகள் என்னென்ன? ராயல் என்ஃபீல்டு
    ஜூன் 16-ல் வெளியாகிறது அப்டேட் செய்யப்பட்ட ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் லைன்-அப் பைக்
    இந்தியாவில் விரைவில் வெளியாகிறது யமஹாவின் R3 மற்றும் MT-03 யமஹா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025