நெக்ஸா லைன்-அப் மாடல்களுக்கு சலுகைகளை அறிவித்திருக்கும் மாருதி
மாருதி சுஸூகி நிறுவனம் தங்களுடைய இக்னிஸ், பெலினோ மற்றும் சியாஸ் ஆகிய குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு மட்டும் ஜூலை மாத்திற்கான சலுகையாக சில சலுகைகளை அறிவித்திருக்கிறது. இந்த சலுகைகளை தள்ளுபடியாகவோ, பரிமாற்ற சலுகையாகவோ அல்லது கார்ப்பரேட் சலுகை வடிவிலோ வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது மாருதி. மாருதி சுஸூகி இக்னிஸ்: 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இக்னிஸ் மாடலானது, மாருதியின் நெக்ஸா லைன்அப்பின் என்ட்ரி-லெவல் காராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடலின் அனைத்து மேனுவல் வேரியன்ட்களுக்கும் ரூ.64,000 வரை சலுகையும், ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களுக்கு ரூ.54,000 வரை சலுகையும் வழங்குகிறது மாருதி. மாருதி ஸ்விப்ட், ஹூண்டாய் கிராண்டு i10 நியாஸ் மற்றும் டாடா டியாகோ ஆகிய கார்களுக்குப் போட்டியாக விற்பனையாகி வருகிறது இக்னிஸ்.
மாருதி சுஸூகி சியாஸ்:
மாருதியின் நெக்ஸா லைன்அப்பின் நீண்ட நாட்களாக விற்பனையில் இருக்கும் மாடல் சியாஸ் தான். இந்த மாடலின் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் ஆகிய இரண்டு விதமான கியர்பாக்ஸ்களைக் கொண்ட வேரியன்ட்களுக்கும் ரூ.38,000 வரை சலுகை வழங்குகிறது மாருதி. இதில் ரூ.10,000 வரை தள்ளுபடி, ரூ.25,000 வரையிலான பரிமாற்ற சலுகை மற்றும் ரூ.3,000 வரையிலான கார்ப்பரேட் சலுகை ஆகியவை அடங்கும். மாருதி சுஸூகி பெலினோ: பெலினோ மாடலின் பெட்ரோல் மேனுவல் மற்றும் CNG வேரியன்ட்களுக்கு ரூ.20,000 சலுகையும், ஆட்டோமேட்டிக் வேரியன்டிற்கு ரூ.17,500 வரையிலான சலுகையும் வழங்குகிறது மாருதி சுஸூகி. CNG வேரியன்ட் ஒன்றுக்கு மாருதி சலுகை வழங்குவது இதுவே முதல் முறை. மேலும், மேற்கூறிய சலுகைகளை தள்ளுபடி அல்லது பரிமாற்ற சலுகையாகவே பெற முடியும்.