இந்தியாவில் வெளியானது ட்ரையம்பின் தொடக்க நிலை மாடலான 'ஸ்பீடு 400' பைக்
செய்தி முன்னோட்டம்
கடந்த வாரம் தான் இந்தியாவில் தங்களது புதிய 400சிசி பைக்குகளான ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்லர் 400X ஆகிய பைக்குகளை அறிமுகப்படுத்தியது ட்ரையம்ப் நிறுவனம்.
தற்போது அதில் முதல் பைக்கான ஸ்பீடு 400-ஐ இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ட்ரையம்ப். வரும் ஜூலை இறுதி முதல் இந்த பைக்கானது இந்தியாவில் விற்பனை செய்யப்படவிருக்கிறது. மற்றொரு பைக்கான ஸ்கிராம்ப்லர் 400X ஆனது அக்டோபர் மாதம் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கேடிஎம் 390 ட்யூக், பிஎம்டபிள்யூ G 310 R மற்றும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்படவிருக்கிறது இந்த புதிய ஸ்பீடு 400.
ட்ரையம்ப்
ட்ரையம்ப் ஸ்பீடு 400: இன்ஜின் மற்றும் விலை
இந்தியாவில் தொடக்க நிலை ட்ரையம்ப் மாடலாக வெளியிடப்பட்டிருக்கிறது இந்த ஸ்பீடு 400.
40hp பவர் மற்றும் 37.5Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய, சிங்கிள் சிலிண்டர் கொண்டு, லிக்விட் கூல்டு 398சிசி TR சீரிஸ் இன்ஜினைப் பெற்றிருக்கிறது ஸ்பீடு 400. மேலும், இந்த இன்ஜினானது 6-ஸ்பீடு கியர்பாக்ஸூடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
ட்ரையம்ப் நிறுவனமானது தங்களது ப்ரீமியம் பைக்கின் டிசைனை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்பீடு 400 பைக்கையும் வடிவமைத்திருக்கிறது.
இந்தியாவில் ரூ.2.33 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது இந்த ட்ரையம்ப் ஸ்பீடு 400. இது அதன் போட்டியாளர்களின் பைக் மாடல்களை விட கிட்டதட்ட ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.