ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் புதிய கார்கள்
கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்: சர்வதேச சந்தையில் கடந்தாண்டே அறிமுகப்படுத்தப்பட்ட செல்டோஸின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வரும் ஜூலை-4ம் தேதி தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது கியா. பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்களுடன், புதிய வசதிகள் மற்றும் புதிய இன்ஜின் ஒன்றையும் பெறுகிறது செல்டோஸ். ஏற்கனவே இருக்கும் 1.5-லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன், 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மாடல் ஒன்றையும் அறிமுகப்படுத்தவிருக்கிறது கியா. மாருதி சுஸூகி இன்விக்டோ: இன்னோவா ஹைகிராஸை அடிப்படையாகக் கொண்ட புதிய எம்பிவி ஒன்றை டொயோட்டா தயாரிக்க, அதனை இன்விக்டோவாக வரும் ஜூலை-5ம் தேதி இந்தியாவில் வெளியிடவிருக்கிறது மாருதி. இந்த இன்விக்டோவின் லோ-எண்டான 2.0-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாடலைத் தவிர்த்துவிட்டு, 2.0-லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் மாடலை மட்டுமே வெளியிடவிருக்கிறது மாருதி.
இரண்டாம் தலைமுறை மெர்சிடீஸ்-பென்ஸ் GLC:
வெளியீட்டு தேதியை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், இந்த மாதம் தங்களுடைய இரண்டாம் தலைமுறை GLC வெளியீட்டை உறுதி செய்திருக்கிறது மெர்சிடீஸ். 2.0-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் GLC 200-யும், 2.0-லிட்டர் டீசல் இன்ஜினுடன் GLC 220d-யையும் வெளியிடவிருக்கிறது மெர்சிடீஸ். இரண்டு மாடல்களிலும் 23hp பவரை உற்பத்தி செய்யக்கூடிய 48V ஸ்டார்டர் மோட்டார் ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். ஹூண்டாய் எக்ஸ்டர்: டாடா பஞ்ச் மற்றும் சிட்ரன் C3-க்குப் போட்டியாக, கிராண்டு i10 நியாஸ் மற்றும் ஆராவின் அண்டர்பின்னிங் மற்றும் இன்ஜினுடன் புதிய எக்ஸ்டரை இந்தியாவில் வரும் ஜூலை 10-ம் தேதி வெளியிடவிருக்கிறது ஹூண்டாய். 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வெளியாகவிருக்கும் இந்த எக்ஸ்டருக்கு, CNG கிட் ஒன்றையும் வழங்கவிருக்கிறது ஹூண்டாய்.