ரூ.25 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியானது புதிய டுகாட்டி டியாவெல் V4
செய்தி முன்னோட்டம்
இத்தாலியைச் சேர்ந்த ப்ரீமியம் பைக் தயாரிப்பாளரான டுகாட்டி நிறுவனம், இந்தியாவில் தங்களுடைய புதிய பைக் மாடல் ஒன்றை வெளியிட்டிருப்பதோடு, மற்றொரு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
இந்தியாவில் தங்களது புதிய டியாவெல் V4 பைக்கை அந்நிறுவனம் வெளியிட்டிருப்பதோடு, ரன்வீர் சிங்கை தங்களுடைய பிராண்டு அம்பாஸிடராகவும் அறிவித்திருக்கிறது டுகாட்டி நிறுவனம்.
ப்ளூடூத் இன்டகிரேஷன் மற்றும் டுகாட்டி டிஸிங்க் செயலியுடன் கூடிய 5 இன்ச் TFT டேஷ்போர்டை புதிய டியாவெல்லில் கொடுத்திருக்கிறது டுகாட்டி. 3 பவர் மோடுகள் மற்றும் 4 ரைடிங் மோடுகளைக் கொண்டிருக்கிறது புதிய டியாவெல் V4.
டுகாட்டி ரெட் மற்றும் த்ரில்லிங் பிளாக் ஆகிய நிறங்களில் வெளியாகியிருக்கிறது டுகாட்டியின் புதிய டியாவெல் V4.
டுகாட்டி
டுகாட்டி டியாவெல் V4: இன்ஜின் மற்றும் விலை
புதிய டியாவெல் V4-ல் 1,158சிசி V4 கிரான்டுரிஸ்மோ இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது டுகாட்டி. இந்த இன்ஜினானது, 10,750 rpm-ல் 168hp பவரையும், 7,500 rpm-ல், அதிகபட்சமாக 126Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது.
நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்ற வகையில் 20-லிட்டர் ஸ்டீல் ப்யூல் டேங்க்கை புதிய டியாவெல் V4-ல் கொடுத்திருக்கிறது டுகாட்டி.
ABS கார்னரிங், டுகாட்டி ட்ராக்ஷன் கண்ட்ரோல், டுகாட்டி வீலி கண்ட்ரோல், டுகாட்டி பவர் லாஞ்ச் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்த புதிய டியாவெல் V4 ப்ரீமியம் பைக்கை இந்தியாவில் ரூ.25.91 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது டுகாட்டி.