'அர்பன் க்ரூஸர் டெய்ஸர்' என்ற புதிய மாடல் காரை வெளியிடுகிறதா டொயோட்டா?
இந்தியாவில் 'அர்பன் க்ரூஸர் டெய்ஸர்' (Urban Cruiser Taisor) என்ற கார் மாடல் பெயருக்கான டிரேட்மார்க்கிற்கு பதிவு செய்திருக்கிறது டொயோட்டா நிறுவனம். மாருதி சுஸூகி பிரெஸ்ஸாவின் மறுவடிவான அர்பன் க்ரூஸரை விற்னையை ஒன்பது மாதங்களுக்கு முன்பு நிறுத்தியது டொயோட்டா. டொயோட்டாவின் போர்ட்ஃபோலியோவில் 'சப் 4 மீட்டர்' பிரிவில் அர்பன் க்ரூஸர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்பு புதிய மாடலை அதுவரை டொயோட்டா அறிமுகப்படுத்தவில்லை. எனவே, புதிய சப் 4 மீட்டர் மாடல் ஒன்றை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய மாடலும், மாருதியின் ஃப்ரான்க்ஸ் மாடலின் மறுவடிவம் செய்யப்பட்ட மாடலாக இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
டொயோட்டாவின் புதிய அர்பன் க்ரூஸர் டெய்ஸர்:
ஃப்ரான்க்ஸ் மாடலை 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் ஆகிய இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்கி வருகிறது மாருதி சுஸூகி. இந்த இரண்டு இன்ஜின்களில், வாடிக்கையாளர்கள் 1.2 லிட்டர் இன்ஜினையே பெரிதும் விரும்புகின்றனர். எனவே, 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை மட்டும் கொண்டு தங்கள் புதிய மாடலை டொயோட்டா அறிமுகப்படுத்தலாம். அல்லது, 1.0 லிட்டர் இன்ஜினைக் கொண்டு தங்கள் லைன்அப்பின் முதல் டர்போ பெட்ரோல் மாடலாகவும் புதிய மாடலை டொயோட்டா அறிமுகப்படுத்தலாம். ஃப்ரான்க்ஸ் மாடலில் CNG ஆப்ஷன் கொண்ட மாடலும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அதனையும் தங்களுடைய புதிய மாடலில் டொயோட்டா வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.