இந்தியாவில் என்னென்ன அம்சங்களுடன் வெளியாகியிருக்கிறது ஹோண்டா லிவோ?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் கம்யூட்டர் பைக் பிரிவில் 2023ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட லிவோ மாடலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டது ஹோண்டா. என்னென்ன அம்சங்களுடன், என்ன விலையில் வெளியாகியிருக்கிறது லிவோ?
புதிய லிவோவை டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு பிரேக்கிங் வசதிகளுடனும் இரண்டு வேரியன்டகளாக வெளியிட்டிருக்கிறது ஹோண்டா.
இந்தப் புதிய கம்யூட்டர் பைக்கை இளம் தலைமுறையினரைக் கவரும் விதமாக டிசைன் செய்திருக்கிறது ஹோண்டா. அதற்கேற்ப புதிய கிரஃபிக்ஸ்களையும் பைக்கின் டேங்க் மற்றும் பாடி பகுதியில் நம்மால் பார்க்க முடிகிறது.
க்ரோம் மஃப்ளர் கவர் மற்றும் பிளாக் அலாய் வீல்களுடன், அத்லெடிக் ப்ளூ மெட்டாலிக், மேட் கிரஸ்ட் மெட்டாலிக் மற்றும் பிளாக் ஆகிய நிறங்களில் வெளியாகியிருக்கிறது லிவோ.
ஹோண்டா
ஹோண்டா லிவோ: இன்ஜின் மற்றும் விலை
புதிய லிவோவில் 109.51 சிசி இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது ஹோண்டா. இந்த இன்ஜினானது, 7,500rpm-ல், 8.67hp பவரையும், 5,500rpm-ல், 9.30Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த இன்ஜினுடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸைக் கொடுத்திருக்கிறது ஹோண்டா.
இந்தப் புதிய பைக்கில், டூ வே இன்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் ஸ்விட்ச், சைலன்ட் ஸ்டார்ட் மோட்டார், இன்-பில்ட் சைட் ஸ்டாண்டு இன்ஹிபிட்டர் மற்றும் எக்ஸ்டர்னல் ப்யூல் பம்ப் ஆகிய வசதிகளைக் கொடுத்திருக்கிறது ஹோண்டா.
இந்தியாவில் இந்த புதிய லிவோவின் டிரம் வேரியன்டை ரூ.78,500 எக்ஸ்-ஷோரூம் விலையிலும், டிஸ்க் வேரியன்டை ரூ.82,500 எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியிட்டிருக்கிறது ஹோண்டா.