ஆட்டோ செய்தி

ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.

27 Oct 2023

ஹீரோ

எக்ஸ்பல்ஸ் 400 பைக் மாடலை சோதனை செய்து வரும் ஹீரோ.. எப்போது வெளியீடு?

இந்தியாவில் எக்ஸ்பல்ஸ் சீரிஸில் எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200T ஆகிய இரு மாடல் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். தற்போது அதே வரிசையில் எக்ஸ்பல்ஸ் 400 மாடல் பைக் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம்.

ரூ.15 லட்சம் விலைக்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாப் எலெக்ட்ரிக் கார்கள்

இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. அனைத்து நகரங்களிலும் எலெக்ட்ரிக் வாகன கட்டமைப்பு மேம்பட்டு வரும் நிலையில், எலெக்ட்ரிக் கார்கள் மீதும் வாடிக்கையாளர்கள் தங்கள் பார்வையை திருப்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் வெளியானது புதிய 'BMW X4 M40i' எஸ்யூவி

சர்வதேச சந்தைகளில் விற்பனையில் இருக்கும் 'X4 M40i' சொகுசு கார் மாடலை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. இந்தப் புதிய எஸ்யூவி மாடலுக்கான முன்பதிவானது பிஎம்டபிள்யூவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் டீலர்ஷிப்களில் தொடங்கப்பட்டிருக்கிறது.

25 Oct 2023

மாருதி

ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் அறிமுகமானது மாருதி சுஸூகியின் 'நான்காம் தலைமுறை ஸ்விப்ட்'

அப்டேட் செய்யப்பட்ட நான்காம் தலைமுறை ஸ்விப்ட் ஹேட்ச்பேக் மாடலை ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது மாருதி சுஸூகி. மேம்படுத்தப்பட்ட டிசைனுடன், புதிய வசதிகள் பலவற்றையும் நான்காம் தலைமுறை ஸ்விப்டில் அளித்திருக்கிறது மாருதி.

இந்தியாவில் டாடா அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்கள்

உலகளவில் பல்வேறு முன்னணி நாடுகளிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது.

உலகளாவிய எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு குறித்த தகவல்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது IEA

சர்வதேச எரிசக்தி நிறுவனமானது(IEA), உலகளவில் ஆற்றல் பயன்படுத்தப்படும் விதம் குறித்த 'World Energy Outlook 2023' அறிக்கையை தற்போது வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவில் விற்பனையாகி வரும் டாப் 5 எலெக்ட்ரிக் பைக்குகள்

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எலெக்ட்ரிக் வாகன விற்பனை சற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் போலவே, பல்வேறு எலெக்ட்ரிக் பைக்குகளும் இந்தியாவில் விற்பனையில் இருக்கின்றன. அப்படி இந்தியாவில் விற்பனையாகி வரும் டாப் 5 எலெக்ட்ரிக் பைக்குகளின் தொகுப்பு தான் இது.

இந்தியாவிற்காக X440-ஐ அடிப்படையாகக் கொண்ட புதிய ஸ்கிராம்ப்ளர் பைக்கை உருவாக்கும் ஹார்லி டேவிட்சன்

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களுடைய புதிய X440 மாடல் பைக்கை வெளியிட்டது அமெரிக்க ப்ரீமியம் பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி-டேவிட்சன். ஹீரோவுடன் கைகோர்த்து இந்தியாவில் இந்தப் புதிய மாடலை விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம்.

புதிய தலைமுறை E-கிளாஸ் லாங் வீல்பேஸ் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ் 

புதிய தலைமுறை E-கிளாஸ் லாங் வீல்பேஸ் மாடலை சீனாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். உலகளவில் மிகவும் பிரபலமான E-கிளாஸ் செடானில், உட்பக்கம் நல்ல இடவசதியுடன் கூடிய மாடலாக இந்த லாங் வீல்பேஸ் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.

23 Oct 2023

டாடா

மஹிந்திரா எஸ்யூவி 700-ல் இல்லாத, டாடா சஃபாரியில் கொடுக்கப்பட்டிருக்கிற 8 வசதிகள்

இந்தியாவில் எஸ்யூவிக்களின் ராஜா என்றால் அது மஹிந்திரா தான். பெரும்பாலும் எஸ்யூவிக்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வரும் மஹிந்திராவின் மாடல்கலுக்குப் போட்டியாக, தாங்கள் விற்பனை செய்து வந்த சஃபாரி மற்றும் ஹேரியர் மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட்களை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது டாடா.

23 Oct 2023

பைக்

ரூ.75,000 விலைக்குள் விற்பனை செய்யப்படும் டாப் 5 கம்யூட்டர் பைக்குகள்

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன சந்தையான இந்தியாவில், 100சிசி இன்ஜின் கொண்ட பைக்குளின் விற்பனையே அதிகளவில் இருக்கிறது.

பெட்ரோல் என்ஜினுடன் ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களை களமிறங்குகிறது டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஹாரியர் மற்றும் சஃபாரி போன்ற நிறுவனத்தின் பிரீமியம் எஸ்யூவி வாகனங்களை பெட்ரோல் என்ஜினுடன் விரைவில் களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லேண்ட் க்ரூஸர் எஸ்இ எலக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்தது டொயோட்டா

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்இ என்ற எஸ்யூவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது லேண்ட் க்ரூஸர் மாடலில் முதல் முழு மின்சார வாகனமாகும்.

20 Oct 2023

மாருதி

சலுகைகளுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸூகி ஜிம்னி

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்திரா தார் மாடலுக்குப் போட்டியாக தங்களுடைய புதிய ஜிம்னியை கடந்த ஜூன் மாதம் களமிறக்கியது மாருதி சுஸூகி. இந்தியா முழுவதும் தங்களுடைய ப்ரீமியமான நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக இந்த ஜிம்னி மாடலை விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம்.

20 Oct 2023

செடான்

விழாக்காலத்தை முன்னிட்டு சலுகைகளுடன் செடான் மாடல்களை விற்பனை செய்து வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

இந்தியாவில் ஆட்டோமொபைல் வாடிக்கையாளர்கள் ஆஸ்தான செக்மண்டாக ஒரு காலத்தில் இருந்தது செடான் செக்மண்ட். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் கவனம் முழுவதும் செடானில் இருந்து எஸ்யூவிக்கள் பக்கமே திரும்பியிருக்கிறது.

ரூ.2.5 கோடி விலையில் வெளியானது 'BMW i7 M70 எக்ஸ்டிரைவ்' எலெக்ட்ரிக் கார்

உலகளவில் தாங்கள் விற்பனை செய்யும் எலெக்ட்ரிக் கார்களிலேயே மிகவும் பவர்ஃபுல்லான எலெக்ட்ரிக் கார் மாடலான 'i7 M70 எக்ஸ்டிரைவ்' மாடலை தற்போது இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ.

ரூ.1.81 கோடி விலையில் இந்தியாவில் வெளியானது 'BMW 740d M ஸ்போர்ட்' செடான்

இந்தியாவில் தங்களது புதிய '7 சீரிஸ் 740d M ஸ்போர்ட்' லக்சரி செடான் மாடலை வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. இந்த மாடலை CBU (Completely Built Unit) முறையில் இந்தியாவில் விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

ரூ.1.37 லட்சம் விலையில் புதிய 'மோட்டோஃபாஸ்ட்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட ஒகாயா நிறுவனம் 

இந்தியாவில் மோட்டோஃபாஸ்ட் (Motofaast) என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டிருக்கிறது ஒகாயா (Okaya) நிறுவனம். ஸ்கூட்டர் மற்றும் பைக் இரண்டும் கலந்த கலவை என தங்களது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்து தெரிவித்திருக்கிறது ஒகாயா.

ரூ.1.55 லட்சம் விலையில் வெளியானது ரிவோல்டின் 'RV400 இந்தியா ப்ளூ' ஸ்பெஷல் எடிஷன் எலெக்ட்ரிக் பைக்

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் தங்களது எலெக்ட்ரிக் பைக்கான 'RV400' பைக்கின் கிரிக்கெட் சிறப்பு எடிஷன் மாடலை வெளியிட்டிருக்கிறது ரிவோல்ட்.

பாதுகாப்பு தரச்சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாடா சஃபாரி மற்றும் ஹேரியர்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுடைய சஃபாரி மற்றும் ஹேரியர் எஸ்யூவி மாடல்களின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களை இந்தியாவில் வெளியிட்டது டாடா மோட்டார்ஸ்.

ரூ.15.49 லட்சம் விலையில் வெளியானது அப்டேட் செய்யப்பட்ட டாடா ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட்

தங்களுடைய சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் மாடலுடன், 2023ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட ஹேரியர் எஸ்யூவி ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் தற்போது வெளியிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ்.

இந்தியாவில் வெளியானது டிவிஎஸ் ஜூப்பிட்டர் 125 ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வேரியன்ட்

இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஜூப்பிட்டர் 125 ஸ்கூட்டர் மாடலின் புதிய வேரியன்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது டிவிஎஸ். அந்நிறுவனத்தின் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வசதியுடன், 'ஜூப்பிட்டர் 125 ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட்' வேரியன்ட் மாடலை தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது டிவிஎஸ்.

ரூ.16.19 லட்சம் விலையில் வெளியான புதிய டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்

இந்தியாவில் விற்பனையாகி வரும் தங்களுடைய எஸ்யூவியான சஃபாரியின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை தற்போது வெளியிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ்.

இந்தியாவில் புதிதாக எலக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்க உள்ளதாக கியா நிறுவனம் அறிவிப்பு

கார் உற்பத்தி நிறுவனமான கியா இந்தியாவில் எலக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது.

14 Oct 2023

வாகனம்

Used Cars வாங்கப்போறீங்களா? பயன்படுத்தப்பட்ட கார் வாங்கும் முன் இதை கவனத்தில் கொள்ளுங்கள்

கொரோனா தொற்றுநோயின் தாக்கம் குறைந்துவிட்டாலும், அது இந்திய வாகன சந்தையில் ஏற்படுத்திய இடையூறுகள் இன்னும் முழுமையாக குறைந்தபாடில்லை.

13 Oct 2023

கார்

இந்தியாவில் விழாக்காலத்தை முன்னிட்டு வெளியாகியிருக்கும் ஸ்பெஷல் எடிஷன் கார்கள்

இந்தியாவில் விழாக்காலத்தை முன்னிட்டு பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் தங்களுடைய கார் மாடல்களின் ஸ்பெஷல் எடிஷன் கார் மாடல்களை வெளியிட்டிருக்கின்றன.

13 Oct 2023

வாகனம்

தமிழகத்தில் உயர்த்தப்பட்டது மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரி.. உயர்கின்றன வாகன விலைகள்!

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மோட்டார் வாகனங்களுக்கான சாலை வரியை உயர்த்தியிருக்கிறது தமிழக அரசு.

12 Oct 2023

சியோமி

எலெக்ட்ரிக் கார் தயாரிப்புத் துறையில் களமிறங்கும் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி

பிற துறைகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகன துறையில் கால் பதித்து புதிய வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வரிசையில் சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மியும் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் களமிறங்க தயாராகி வருகிறது.

அக்டோபர் 17ல் வெளியாகிறது அப்டேட் செய்யப்பட்ட டாடா சஃபாரி மற்றும் டாடா ஹேரியர் 

இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட சஃபாரி மற்றும் ஹேரியர் எஸ்யூவி மாடல்களை வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ்.

'மீட்டியார் 350'யில் புதிய வேரியன்டான 'ஆரோரா'வை அறிமுகப்படுத்திய ராயல் என்ஃபீல்டு

இந்தியாவில் பெரிய இன்ஜின் கொண்ட புதிய ஹிமாலயன் பைக்கை ராயல் என்ஃபீல்டு வெளியிடப்போவதாக ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில், இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட வரும் 'மீட்டியார் 350' மாடலின் புதிய வேரியன்ட் ஒன்றை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

11 Oct 2023

சுஸூகி

ஜப்பானைச் சேர்ந்த ஸ்கைடிரைவ் நிறுவனத்துடன் பறக்கும் கார்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சுஸூகி

எரிபொருள் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் தற்போதைய வேளையிலேயே, பறக்கும் கார்களும் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

11 Oct 2023

பைக்

தலைக்கவசம் மட்டுமல்ல ரைடிங் கியர்களைப் பயன்படுத்துவதையும் பரிசீலனை செய்யுங்கள் பைக்கர்களே

இன்றைய வேகமான நவீன வாழ்க்கை முறையில் ஒரு வீட்டிற்கு ஒரு பைக் என்பது அத்தியாவசியமாகிவிட்டது. அதற்கு அடுத்த படிநிலையாக இளைஞர்கள் பலரும் வேகமாக செல்லக்கூடிய ப்ரீமியம் பைக்குகளை விரும்பத் தொடங்கவிட்டார்கள்.

ரூ.2.63 லட்சம் விலையில் வெளியானது ட்ரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400X

இந்தியாவில் புதிய ஸ்கிராம்ப்ளர் 400X ப்ரீமியம் பைக் மாடலை வெளியிட்டிருக்கிறது ட்ரையம்ப். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களுடைய புதிய ரோட்ஸ்டர் பைக்கான ஸ்பீடு 400 மாடலை இந்தியாவில் வெளியிட்ட நிலையில், தற்போது இந்த ஸ்கிராம்ப்ளர் 400X மாடலை வெளியிட்டிருக்கிறது ட்ரையம்ப்.

10 Oct 2023

ஸ்கோடா

இந்தியாவில் புதிய 'ஸ்லாவியா மேட் எடிஷன்' மாடலை வெளியிட்டுள்ளது ஸ்கோடா

ஸ்லாவியா செடான் காரின் மேட் எடிஷன் மாடலை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஸ்கோடா. மேட் பினிஷூடன் கூடிய கார்பின் ஸ்டீல் வெளிப்புறத்தைக் கொண்டிருக்கிறது இந்தப் புதிய மேட் எடிஷன் ஸ்லாவியா மாடல்.

இந்தியாவில் வெளியானது புதிய மினி 'கன்ட்ரிமேன் ஷேடோ எடிஷன்' சொகுசு கார்

இந்தியாவில் புதிய 'கன்ட்ரிமேன் ஷேடோ எடிஷன்' மாடல் சொகுசு காரை வெளியிட்டிருக்கிறது மினி. 'கன்ட்ரிமேன் கூப்பர் S JCW' மாடலை அடிப்படையாகக் கொண்டு இந்த மாடலை வடிவமைத்திருக்கிறது மினி.

முந்தைய மாடலை விட அதிக பவரை உற்பத்தி செய்யும் RE ஹிமாலயன் 452

அடுத்த மாதம் புதிய ஹிமாலயன் பைக்கை வெளியிடவிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. அந்த பைக்கிற்கான ப்ரமோஷனல் வீடியோ ஒன்றை சமீபத்தில் பகிர்ந்திருக்கிறது அந்நிறுவனம்.

சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் வின்ஃபாஸ்ட்

வியட்நாமைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பாளரான் வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம் இந்தியா ஆட்டோமொபைல் சந்தையிலும் நுழைய திட்டமிடுவதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

70,000 முன்பதிவுகளைப் பெற்ற ஹூண்டாய் எக்ஸ்டர் காம்பேக்ட் எஸ்யூவி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தங்களுடைய புதிய காம்பேக்ட் எஸ்யூவியான எக்ஸ்டரை அறிமுகப்படுத்தியது ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய்.

08 Oct 2023

கார்

Autombile Safety Tips : கார் விபத்தில் ஏர்பேக்கினால் ஏற்படும் காயத்தைத் தவிர்ப்பது எப்படி?

ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் கார் விபத்துக்களில் சிக்குகின்றனர். நவீன வாகனங்கள் பயணிகளைப் பாதுகாப்பதற்காக ஏராளமான பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.

புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட சஃபாரியை அறிமுகப்படுத்திய டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் ஏழு இருக்கைகள் கொண்ட புதிய தலைமுறை 2023 டாடா சஃபாரி எஸ்யுவி கார்களை அறிமுகப்படுத்தி உள்ளது.