NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ரூ.16.19 லட்சம் விலையில் வெளியான புதிய டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ.16.19 லட்சம் விலையில் வெளியான புதிய டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்
    ரூ.16.19 லட்சம் விலையில் வெளியான புதிய டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்

    ரூ.16.19 லட்சம் விலையில் வெளியான புதிய டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 17, 2023
    02:21 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் விற்பனையாகி வரும் தங்களுடைய எஸ்யூவியான சஃபாரியின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை தற்போது வெளியிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ்.

    பத்து தனித்துவமான வேரியன்டகளில், ஏழு விதமான வெளிப்புற நிறங்களில் புதிய ஃபேஸ்லிஃப்டட் சஃபாரியை வெளியிட்டிருக்கிறது டாடா.

    வெளிப்புறம் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர்கள், கனெக்ட் செய்யப்பட்ட DRL, ஸ்பிளிட் செய்யப்பட்ட எல்இடி முகப்பு விளக்குகள், புதிய பாராமெட்ரிக் கிரில், கனெக்ட் செய்யப்பட்ட லைட் பாருடன் கூடிய எல்இடி டெயில்லைட் ஆகிய டிசைன் மாற்றங்களைப் பெற்றிருக்கிறது சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்.

    ஸ்மார்ட் (O), ப்யூர் (O), அட்வென்சர், அட்வென்சர்+, அட்வென்சர்+ டார்க், அக்காம்ப்ளிஷ்டு, அக்காம்ப்ளிஷ்டு டார்க், அக்காம்ப்ளிஷ்டு+ டார்க், அட்வென்சர்+ A மற்றும் அக்காம்ப்ளிஷ்டு+ என பத்து வேரியன்ட்களாக வெளியாகியிருக்கிறது டாடா சஃபாரி.

    டாடா மோட்டார்ஸ்

    டாடா சஃபாரி எஸ்யூவி: வசதிகள் மற்றும் விலை 

    சஃபாரியின் 2.0 கிரியோடெக் டீசல் இன்ஜினில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த இன்ஜினானது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸூடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

    புதிய ஃபேஸ்லிஃப்ட் சஃபாரியின் உட்புறம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் கூடிய 12.3 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் பேனல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், நான்கு ஸ்போக்குகள் கொண்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் வென்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்கள் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

    காஸ்மிக் கோல்டு மற்றும் கேலக்டிக் சஃபைர் உள்ளிட்ட ஏழு நிறங்களில் வெளியாகியிருக்கும் இந்த சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் மாடலானது, இந்தியாவில் ரூ.16.19 லட்சம் முதல் ரூ.25.49 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படவிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டாடா மோட்டார்ஸ்
    ஃபேஸ்லிஃப்ட்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    டாடா மோட்டார்ஸ்

    ரத்தன் டாடாவின் 85 வது பிறந்தநாள் ஸ்பெஷல்: டாடாவின் 5 விலை உயர்ந்த பொருட்கள் வாகனம்
    ஜனவரி சலுகை: மாதம் ரூ.65,000 வரை தள்ளுபடி விலையில் டாடா கார்கள் ஆட்டோமொபைல்
    மாருதி டாடா ஹூண்டாய் கார்களுக்கு செம்ம தள்ளுபடி அறிவிப்பு! விலையை சரிபார்க்கவும் கார் உரிமையாளர்கள்
    2023-இல் வெளியாகும் மாருதி மற்றும் ஹூண்டாய் டாடா கார்கள்! கார் உரிமையாளர்கள்

    ஃபேஸ்லிஃப்ட்

    புதிய க்ரெட்டா மற்றும் டூஸான் ஃபேஸ்லிப்ட் மாடல்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் ஹூண்டாய் ஹூண்டாய்
    இந்தியாவில் ரேஞ்சு ரோவர் வேலாரின் முன்பதிவை தொடங்கியது லேண்டு ரோவர் சொகுசு கார்கள்
    இந்தியாவில் வெளியானது அப்டேட் செய்யப்பட்ட ரேஞ்சு ரோவர் வேலார் ஃபேஸ்லிஃப்ட் புதிய கார்
    நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்திய டாடா டாடா மோட்டார்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025