
புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட சஃபாரியை அறிமுகப்படுத்திய டாடா மோட்டார்ஸ்
செய்தி முன்னோட்டம்
டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் ஏழு இருக்கைகள் கொண்ட புதிய தலைமுறை 2023 டாடா சஃபாரி எஸ்யுவி கார்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
டாடா சஃபாரி எஸ்யுவிக்கான முன்பதிவை தொடங்கியுள்ள நிறுவனம், டோக்கன் தொகையாக ரூ.25,000 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த காரின் ஆரம்ப விலை சுமார் ரூ. 16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், இது ஹூண்டாய் ALCAZAR மற்றும் மஹிந்திரா XUV700 ஆகியவற்றுக்கு போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2020இல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அப்போது அதிக வரவேற்பை பெற்றது.
இருப்பினும், மஹிந்திரா XUV700 வருகையால் அதன் புகழ் சற்று மங்கிய நிலையில், இப்போது புதுப்பிக்கப்பட்ட அம்சங்களுடன் மீண்டும் களமிறங்க உள்ளது.
Tata Safari 2023 launced booking open
2023 டாடா சஃபாரி எஸ்யுவியின் சிறப்பம்சங்கள்
2023 டாடா சஃபாரி எஸ்யுவி ஆனது முற்றிலும் புதிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் புதிய அளவுகோல் கிரில், ப்ரொஜெக்டர் பை-எல்இடி ஹெட்லைட்கள் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
எஸ்யூவியின் பின்புறம் இணைக்கப்பட்ட எல்இடி டெயில் லேம்ப்களைக் கொண்டுள்ளது.
பரந்த வாடிக்கையாளர் தளத்தை ஈர்க்கும் வகையில், 2023 டாடா சஃபாரி விசாலமான கேபின் முழுவதும் பல வண்ண மூட் லைட்டிங் அம்சங்களை சேர்த்துள்ளது.
பல எல்இடி லைட் பார்களின் நிறம் மற்றும் வெளிச்சம் மிகப்பெரிய 12.3-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, 2023 சஃபாரி பல நிலை-2 ADAS செயல்பாடுகளுடன் வருகிறது.