லேண்ட் க்ரூஸர் எஸ்இ எலக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்தது டொயோட்டா
டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்இ என்ற எஸ்யூவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது லேண்ட் க்ரூஸர் மாடலில் முதல் முழு மின்சார வாகனமாகும். வழக்கமாக எஸ்யூவி வாகனங்கள் கரடுமுரடான நிலப்பரப்பை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டாலும், இது முழுமையாக நகரத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், லேண்ட் க்ரூஸர் எலக்ட்ரிக் எஸ்யூவி என்றால் என்ன என்பதை மறுவரையறை செய்வதை டொயோட்டா நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது. இதற்கிடையே, லேண்ட் க்ரூஸர் எஸ்இ அதன் முன்னோடிகளைப் போலல்லாமல், மென்மையான, பேட்டரி-எலக்ட்ரிக் டார்க் மற்றும் சத்தமில்லாத சிட்டி க்ரூஸிங்கில் அதிக கவனம் செலுத்துகிறது.
லேண்ட் க்ரூஸர் எஸ்இ மாடலின் சிறப்பம்சங்கள்
நகரத்தை மையமாகக் கொண்ட இந்த எஸ்யூவிக்கள் 202.0 அங்குல நீளமும், 78.0 அங்குல அகலமும், 67.0 அங்குல உயரமும் கொண்ட அதன் பரிமாணங்கள் கிராண்ட் ஹைலேண்டரின் பரிமாணங்களைப் பிரதிபலிக்கின்றன. வாகனத்தின் குறைந்த கிளியரன்ஸ் மற்றும் குறைந்த சுயவிவர டயர்களைப் பார்த்தால், பாறை நிலப்பரப்பில் செல்வதை விட, மால் வாகன நிறுத்துமிடத்தில் வேகத்தடைகளைச் சமாளிப்பதை இது நோக்கமாக கொண்டுள்ளது தெரிகிறது. இந்த வாகனத்தின் பவர் அல்லது பேட்டரி அளவு பற்றிய விவரங்களை டொயோட்டா நிறுவனம் வெளியிடவில்லை. எனினும், நேர்த்தியான பிரீமியம் விலை கொண்ட வாகனமாகமாக களமிறக்கப்படும் இது நகர்ப்புற எஸ்யூவி சந்தையில் முக்கிய இடத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.