மஹிந்திரா எஸ்யூவி 700-ல் இல்லாத, டாடா சஃபாரியில் கொடுக்கப்பட்டிருக்கிற 8 வசதிகள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் எஸ்யூவிக்களின் ராஜா என்றால் அது மஹிந்திரா தான். பெரும்பாலும் எஸ்யூவிக்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வரும் மஹிந்திராவின் மாடல்கலுக்குப் போட்டியாக, தாங்கள் விற்பனை செய்து வந்த சஃபாரி மற்றும் ஹேரியர் மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட்களை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது டாடா.
மஹிந்திராவின் ஃப்ளாக்ஷிப் எஸ்யூவியாக இருப்பது எக்ஸ்யூவி 700 மாடல்தான். அந்த மாடலில் இல்லாத, அதே நேரம் டாடாவின் புதிய சஃபாரியில் கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் என்னென்ன? பார்க்கலாம்.
புதிய ஃபேஸ்லிப்ட் சஃபாரியில் வென்டிலேட்டட் சீட்களைக் கொடுத்திருக்கிறது டாடா. சஃபாரியின் 6 சீட்கள் கொண்ட வேரியன்டில் இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கும் வெண்டிலேட்டட் சீட்களை கொடுத்திருக்கிறது அந்நிறுவனம். ஆனால், மஹிந்திராவின் எக்ஸ்யூவி 700-ல் இந்த வசதி இல்லை.
டாடா
எக்ஸ்யூவி 700 இல்லாத, சஃபாரியில் உள்ள வசதிகள்:
சஃபாரியில் இரண்டாவது இருக்கையில் கேப்டன் சீட்கள் கொண்ட மாடல்களை வழங்கியிருக்கிறது டாடா. ஆனால், எக்ஸ்யூவி 700-ல் பெஞ்ச் சீட்கள் தேர்வை மட்டுமே அளித்திருக்கிறது மஹிந்திரா.
பவர்டு டெயில்கேட்களை புதிய ஃபேஸ்லிப்டட் சஃபாரி மற்றும் ஹேரியர் என இரண்டு மாடல்களிலும் கொடுத்திருக்கிறது டாடா. ஆனால், மஹிந்திராவின் எக்ஸ்யூவி 700-ல் அந்த வசதி இல்லை.
சஃபாரி மற்றும் எக்ஸ்யூவி 700 என இரண்டு மாடல்களிலுமே ஓட்டுநர் இருக்கைக்கு 6 வரை பவர் அட்ஜஸ்டபிள் வசதி வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், சஃபாரியில் மட்டுமே முன்பக்க பயணியர் இருக்கைக்கும் 4 வகை பவர் அட்ஜஸ்டபிள் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.
மஹிந்திரா
வசதிகளில் எக்ஸ்யூவி 700 மற்றும் சஃபாரி மாடல்களுக்கு இடையேயான வேறுபாடுகள்:
எக்ஸ்யூவி 700-ல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்டை மஹிந்திரா வழங்கினாலும், பேடில் ஷிப்டரை வழங்கியிருப்பது டாடா மட்டுமே.
தானியங்கி IRVM (Inside rear view mirror) டிம்மிங் வசதியை வழங்கியிருப்பது டாடா மட்டுமே, புதிய சஃபாரியில் இந்த வசதியை வழங்கியிருக்கிறது அந்நிறுவனம். இரவு நேரங்களில் பின்னால் வரும் வானகங்களின் முகப்பு விளக்கும் வெளிச்சமானது, ஓட்டுநரை பாதிக்காமல் இருக்க இந்த வசதி பயன்படுகிறது.
சஃபாரியின் டாப் எண்டு மாடல்களில் 19 இன்ச் என்ற பெரிய அலாய் வீல்களை அளித்திருக்கிறது டாடா. மஹிந்திராவின் எக்ஸ்யூவி 700-ல் இது இல்லை.
அதேபோல் உள்பக்கம் 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமானது சஃபாரியில் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், எக்ஸ்யூவி 700-ல் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.