ரூ.75,000 விலைக்குள் விற்பனை செய்யப்படும் டாப் 5 கம்யூட்டர் பைக்குகள்
உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன சந்தையான இந்தியாவில், 100சிசி இன்ஜின் கொண்ட பைக்குளின் விற்பனையே அதிகளவில் இருக்கிறது. குறைவான விலையில் நிறைவானை மைலேஜூடன் இந்தியாவின் பெரும்பாலான நடுத்தக் குடும்பங்களைச் சேர்ந்த வாகனமாக இருப்பவை 100சிசி இன்ஜின் கொண்ட வாகனங்கள் தான். இந்தியாவில் விற்பனையில் உள்ள 75,000 விலைக்குள்ளான டாப் 5 100சிசி பைக்குகளின் பட்டியலே இது. ஹீரோ ஸ்ப்ளென்டர் பிளஸ்: 7.9hp பவர் மற்றும் 8.05Nm டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்ட 97.2 சிசி ஏர்கூல்டு இன்ஜினைக் கொண்ட பைக்காக இருக்கிறது ஹீரோ ஸ்ப்ளென்டர் பிளஸ். 80 கிமீ வரை மைலேஜ் கொடுக்கும் இந்த பைக்கானது, இந்தியாவில் ரூ.75,100 எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பஜாஜ் பிளாட்டினா 100:
7.7hp பவர் மற்றும் 8.30Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 102 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு இன்ஜினைப் பெற்றிருக்கிறது பஜாஜ் பிளாட்டினா 100. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 70 கிமீ வரை மைலேஜ் கொடுக்கும் இந்த பைக்கானது ரூ.67,800 எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஹீரோ HF டீலக்ஸ்: ஸ்ப்ளென்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 7.9hp பவர் மற்றும் 8.05Nm டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்ட 97.2 சிசி ஏர்கூல்டு இன்ஜினையே HF டீலக்ஸிலும் பயன்படுத்தியிருக்கிறது ஹீரோ. 65 கிமீ மைலேஜ் கொடுக்கும் HF டீலக்ஸ் மாடலை ரூ.62,800 எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது ஹீரோ நிறுவனம்.
ஹோண்டா ஷைன் 100:
7.2hp பவர் மற்றும் 8.05Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 98.8 சிசி சிங்கள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜினை தங்களுடைய ஷைன் 100 கம்யூட்டர் பைக்கில் பயன்படுத்தியிருக்கிறது ஹோண்டா. ஒரு லிட்டருக்கு 67 கிமீ வரை மைலேஜ் கொடுக்கக்கூடிய இந்த பைக்கை இந்தியாவில் ரூ.64,900 எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். ஹீரோ HF 100: தங்களுடைய ஸ்ப்ளென்டர் மற்றும் HF டீலக்ஸ் பைக்குகளில் பயன்படுத்திய அதே 97.2 சிசி இன்ஜினையே இந்த HF 100 மாடலிலும் பயன்படுத்தியிருக்கிறது ஹீரோ. 70 கிமீ வரை மைலேஜ் கொடுக்கும் இந்த பைக்கானது இந்தியாவில் ரூ.57,000 எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருவதுடன், இந்தியாவில் மிகவும் விலை குறைந்த பைக் மாடல்களில் ஒன்றாகவும் இருக்கிறது.