NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இந்தியாவில் விழாக்காலத்தை முன்னிட்டு வெளியாகியிருக்கும் ஸ்பெஷல் எடிஷன் கார்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் விழாக்காலத்தை முன்னிட்டு வெளியாகியிருக்கும் ஸ்பெஷல் எடிஷன் கார்கள்
    இந்தியாவில் விழாக்காலத்தை முன்னிட்டு வெளியாகியிருக்கும் ஸ்பெஷல் எடிஷன் கார்கள்

    இந்தியாவில் விழாக்காலத்தை முன்னிட்டு வெளியாகியிருக்கும் ஸ்பெஷல் எடிஷன் கார்கள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 13, 2023
    02:29 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் விழாக்காலத்தை முன்னிட்டு பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் தங்களுடைய கார் மாடல்களின் ஸ்பெஷல் எடிஷன் கார் மாடல்களை வெளியிட்டிருக்கின்றன.

    அப்படி என்னென்ன மாடல்கள் தற்போது வரை வெளியாகியிருக்கின்றன என்பதன் லைன்-அப் தான் இது.

    ஹோண்டா அமேஸ் எலைட் மற்றும் சிட்டி எலிகண்ட் எடிஷன்:

    இந்தியாவில் தங்களுடைய செடான்களின் ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா.

    அமேஸ் எலைட் எடிஷனை ரூ.9.04 லட்சம் முதல் ரூ.9.86 லட்சம் வரையிலான விலையிலும், சிட்டி எலிகண்ட் எடிஷனை ரூ.12.57 லட்சம் முதல் ரூ.13.82 லட்சம் வரையிலான விலையிலும் வெளியிட்டிருக்கிறது ஹோண்டா.

    இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல்களில் புதிய வசதிகள் ஏதுமின்றி டிசைனில் மட்டும் சின்னச் சின்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

    ஆட்டோ

    ஸ்கோடா குஷாக் ஒனிக்ஸ் பிளஸ் வேரியன்ட்: 

    குஷாக்கின் இந்த வேரியன்டை ரூ.11.59 லட்சம் விலையில் வெளியிட்டிருக்கிறது ஸ்கோடா. இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடலின் விண்டோ, முன்பக்க கிரில் மற்றும் பூட்டில் குரோம் அக்சன்ட் கொடுக்ப்பட்டிருக்கிறது.

    1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் மட்டுமே இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் விற்பனை செய்யப்படவிருக்கிறது.

    ரெனோ அர்பன் நைட் எடிஷன்:

    தங்களது இந்திய லைன்-அப்பில் உள்ள க்விட், கைகர் மற்றும் டிரைபர் என அனைத்து மாடல்களிலும் அந்த அர்பன் நைட் எடிஷனை வெளியிட்டிருக்கிறது ரெனோ.

    மேற்கூறிய மாடல்களின் டாப்-எண்டு வேரியன்டைக் கொண்டு மட்டுமே அர்பன் நைட் எடிஷனை வடிவமைத்திருக்கிறது அந்நிறுவனம். மேலும், இந்த அர்பன் நைட் எடிஷன் மாடல்களுக்கு ரூ.15,000 கூடுதலாகக் கொடுக்க வேண்டியிருக்கும்.

    ஸ்பெஷல் எடிஷன்

    எம்ஜி அஸ்டர் ப்ளாக் ஸ்டார்ம் எடிஷன்: 

    ரூ.14.48 லட்சம் முதல் ரூ.15.77 லட்சம் வரையிலான விலைகளில் புதிய அஸ்டர் ப்ளாக் ஸ்டார்ம் எடிஷனை வெளியிட்டிருக்கிறது எம்ஜி.

    முழுவதும் கருப்பு நிறம், பனோரமிக் சன்ரூஃப், கருப்பு நிற ஹனிகோம்ப் கிரில், கருப்பு அலாய் வீல்கள் மற்றும் கருப்பு நிற ரூஃப் ரெயில் அனைத்தும் கருப்பு நிறத்திலேயே அளிக்கப்பட்டிருக்கின்றன.

    நிஸான் மேக்னைட் குரோ ஸ்பெஷல் எடிஷன்:

    'குரோ' என்றால் ஜப்பானிய மொழியில் கருப்பு என பொருளாம். தங்களது மேக்னைட் மாடலை கருப்பு நிறத்தால் அலங்கரித்து இந்த குரோ ஸ்பெஷல் எடிசனை வெளியிட்டிருக்கிறது நிஸான்.

    ரூ.8.27 லட்சம் முதல் ரூ.10.46 லட்சம் வரையிலான விலைகளில், மூன்று வேரியன்ட்களாக, இரண்டு இன்ஜின் தேர்வுகளுடன் வெளியாகியிருக்கிறது இந்த மேக்னைட் குரோ ஸ்பெஷல் எடிஷன் எஸ்யூவி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கார்
    ஆட்டோமொபைல்
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கார்

    இந்தியாவில் வெளியானது அப்டேட் செய்யப்பட்ட ரேஞ்சு ரோவர் வேலார் ஃபேஸ்லிஃப்ட் ஃபேஸ்லிஃப்ட்
    சாட்ஜிபிடி பட்டியலிட்ட இந்தியாவின் 7 சிறந்த கார்கள் சாட்ஜிபிடி
    இந்தியாவில் டொயோட்டா அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய கார் மாடல்கள் என்னென்ன? மாருதி
    'டாடா சுமோ', தங்கள் நிறுவன ஊழியரின் பெயரையே கார் மாடலுக்கு சூட்டிய டாடா டாடா மோட்டார்ஸ்

    ஆட்டோமொபைல்

    மலிவான எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங்கை வழங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா எலக்ட்ரிக் வாகனங்கள்
    டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதல் வரி? விளக்கமளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி! நிதின் கட்கரி
    கார்களில் ஆறு ஏர்பேக்குகள் கட்டாயமில்லையா? என்ன கூறினார் நிதின் கட்கரி? நிதின் கட்கரி
    இந்தியாவில் வெளியானது புதிய சிட்ரன் 'C3 ஏர்கிராஸ்' எஸ்யூவி எஸ்யூவி

    இந்தியா

    மருத்துவ பரிசோதனைக்காக தர்மசாலாவில் இருந்து டெல்லி செல்கிறார் தலாய்லாமா டெல்லி
    இந்தியாவில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    ஆதித்யா எல்1 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதையில் திருத்தம் செய்தது இஸ்ரோ இஸ்ரோ
    ஜெருசலம் பயணத்தை தவிர்க்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025