NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் வின்ஃபாஸ்ட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் வின்ஃபாஸ்ட்
    சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் வின்ஃபாஸ்ட்

    சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் வின்ஃபாஸ்ட்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 09, 2023
    04:51 pm

    செய்தி முன்னோட்டம்

    வியட்நாமைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பாளரான் வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம் இந்தியா ஆட்டோமொபைல் சந்தையிலும் நுழைய திட்டமிடுவதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

    இந்நிலையில், சென்னையில் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனத்திற்கு சொந்தமான தயாரிப்பு தொழிற்சாலையை வாங்குவதற்கு வின்ஃபாஸ்ட் ஆர்வம் காட்டி வருவதாகவும், முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகியிருக்கின்றன.

    2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட வின்ஃபாஸ்ட் நிறுவனம், தொடக்கத்தில் பிஎம்டபிள்யூ மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து வியட்நாமில் புதிய கார்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது.

    பின்னர் எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்புக்கு மாறி, 2021ம் ஆண்டு அமெரிக்காவில் VF 8 மற்றும் VF 9 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் எஸ்யூவிக்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.

    எலெக்ட்ரிக் கார்

    இந்தியாவில் வின்ஃபாஸ்டின் திட்டம்: 

    அமெரிக்காவில் சராசரியான விற்பனையையே கொண்டிருக்கும் போதிலும், தற்போது அந்நாட்டில் புதிய எலெக்ட்ரிக் கார் தொழிற்சாலை ஒன்றை கட்டமைத்து வருகிறது வின்ஃபாஸ்ட்.

    அமெரிக்காவைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலும் எலெக்ட்ரிக் கார் விற்பனையைத் தொடங்க திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம்.

    இந்தியாவில் அதன் ஒரு பகுதியாகவே ஃபோர்டு தொழிற்சாலையை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறது. மேலும், அடுத்த ஆண்டே இந்தியாவில் செயல்பாடுகளைத் தொடங்க நிறுவனத்திற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டிருக்கிறது அந்நிறுவனம்.

    தொடக்கத்தில் முழுவதுமாக கட்டமைக்கப்பட்டும், பின்னர் இந்தியாவில் அசெம்பிள் செய்தும் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது வின்ஃபாஸ்ட். இந்தியாவில் விற்பனையை பொருத்து, உள்நாட்டிலேயே பாகங்களை தயாரிக்கும் திட்டத்தையும் பரிசீலனையில் வைத்திருக்கிறது வின்ஃபாஸ்ட்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எலக்ட்ரிக் கார்
    வியட்நாம்
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    எலக்ட்ரிக் கார்

    எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை உயர்கிறதா? எலக்ட்ரிக் வாகனங்கள்
    டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்குமா? எலான் மஸ்க்
    புதிய எலெக்ட்ரிக் i5 மாடலை அறிமுகப்படுத்தியது BMW.. இந்தியாவில் வெளியீடு எப்போது? பிஎம்டபிள்யூ
    சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பாவ்ஜன் யெப் எலெக்ட்ரிக் கார்.. இந்தியாவிலும் வெளியாகுமா? எம்ஜி மோட்டார்

    வியட்நாம்

    வியட்நாமிற்கு சுற்று பயணம் செய்ய போகிறீர்களா? நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் சுற்றுலா
    இந்தியாவில் கால் பதிக்கும் வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் ஆட்டோமொபைல் நிறுவனம் ஆட்டோமொபைல்

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் இந்த செப்டம்பரில் வெளியாகவிருக்கும் எஸ்யூவிக்கள் எஸ்யூவி
    இந்தியாவில் புதிய எலிவேட் எஸ்யூவியை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா ஹோண்டா
    வென்யூ மற்றும் வென்யூ N மாடல்களில் அடாஸ் தொழில்நுட்பத்தை வழங்கியிருக்கிறது ஹூண்டாய் ஹூண்டாய்
    இந்தியாவில் வெளியானது வால்வோவின் புதிய 'C40 ரீசார்ஜ்' எலெக்ட்ரிக் கார் எலக்ட்ரிக் கார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025