இந்தியாவில் விற்பனையாகி வரும் டாப் 5 எலெக்ட்ரிக் பைக்குகள்
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எலெக்ட்ரிக் வாகன விற்பனை சற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் போலவே, பல்வேறு எலெக்ட்ரிக் பைக்குகளும் இந்தியாவில் விற்பனையில் இருக்கின்றன. அப்படி இந்தியாவில் விற்பனையாகி வரும் டாப் 5 எலெக்ட்ரிக் பைக்குகளின் தொகுப்பு தான் இது. ரிவோல்ட் RV 400: 3kW எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 3.24kWh பேட்டரியுடன் 150 கிமீ ரேஞ்சைக் கொண்டிருக்கிறது ரிவோல்டின் RV 400 எலெக்ட்ரிக் பைக். அதிகபட்சமாக மணிக்கு 85 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த பைக்கின் பேட்டரியை 4.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இந்தியாவில் ரூ.1.4 லட்சம் எக்ஸ்-ஷோரூம் என்ற தொடக்க விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த பைக்.
ஹாப் ஆக்ஸோ (HOP OXO):
5.2kW பவரைக் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 3.75kW பேட்டரியுடன் 140கிமீ ரேஞ்சைக் கொண்டிருக்கிறது ஹாப் மொபிலிட்டி நிறுவனத்தின் ஆக்ஸோ எலெக்ட்ரிக் பைக். அதிகபட்சமாக 88கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த பைக்கின் பேட்டரியை 5 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இந்தியாவில் ரூ.1.43 லட்சம் என்ற தொடக்க விலையிலிருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஓபென் ரோர் (OBEN ROR): 8kW பவரைக் கொண் எலெக்ட்ரிக் மோட்டார் மற்ரும் 4.4kWh பேட்டரியுடன் 190கிமீ ரேஞ்சைக் கொண்டிருக்கிறது இந்த பைக். அதிகபட்சமாக 100கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த பைக்கின் பேட்டரியை 2 மணிநேரத்தில் 80% வரை சார்ஜ் செய்ய முடியும். ரூ.1.49 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த பைக்.
டார்க் கிராடோஸ் (TORK KRATOS):
10hp பவரை வெளிப்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 4kWh பேட்டரியுடன் 180கிமீ ரேஞ்சைக் கொண்டிருக்கிறது இந்த பைக். ஒரு மணி நேரத்தில் 0-80% வரை சார்ஜ் ஆகும் இந்த பைக்கானது அதிகபட்சமாக 105கிமீ வரை செல்லும் திறனைக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ரூ.1.67 லட்சம் தொடக்க விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அல்ட்ராவைலட் F77: இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் எலெக்ட்ரிக் பைக்குகள் வரிசையில், இது எலெக்ட்ரிக் சூப்பர்பைக். அதிகபட்சமாக 150 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த பைக்கானது 300 கிமீ ரேஞ்சைக் கொண்டிருக்கிறது. மிகவும் மேம்படுத்தப்பட்ட இந்த எலெர்ட்ரிக் பைக்கானது இந்தியாவில் ரூ.3.80 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த அல்ட்ராவைலட் F77.