Page Loader
ஆகஸ்ட் மாத அசத்தல் ஆஃபர்; கார்களுக்கு அதிகபட்ச தள்ளுபடியை அறிவித்தது ரெனால்ட் நிறுவனம்
கார்களுக்கு அதிகபட்ச தள்ளுபடியை அறிவித்தது ரெனால்ட் நிறுவனம்

ஆகஸ்ட் மாத அசத்தல் ஆஃபர்; கார்களுக்கு அதிகபட்ச தள்ளுபடியை அறிவித்தது ரெனால்ட் நிறுவனம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 05, 2023
04:47 pm

செய்தி முன்னோட்டம்

ரெனால்ட் நிறுவனம் இந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் தனது அனைத்து வகையான கார்களுக்கும் சலுகைகளை அறிவித்துள்ளது. இதனபடி வாடிக்கையாளர்கள் கார் மாடல்களை பொறுத்து விலையில் தள்ளுபடிகள், பரிமாற்றச் சலுகைகள் மற்றும் லாயல்டி போனஸ்கள் போன்ற பலன்களை அனுபவிக்க முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்கள் Kiger வகை கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.65,000 வரை தள்ளுபடியை வழங்குகின்றன. மேலும் KWID மாடலுக்கு ஒருங்கிணைந்த பலன்கள் மூலம் ரூ.45,000 வரை சலுகை கிடைக்கிறது. இவற்றுடன் ஒப்பிடுகையில், Triber மாடல் கார்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.40,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடிகள் ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையை அதிகரிக்கவும் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் ரெனால்ட் நிறுவனம் நேரடியாக வழங்குகிறது.

Renault offers discounts for cars

ரெனால்ட் நிறுவனத்தின் கார்களை வாங்க அதிக ஆர்வம் காட்டும் மக்கள்

ரெனால்ட் ஜூன் மாதத்தில் இந்தியாவில் உள்ள தனது தொழிற்சாலையில் 10 லட்சம் யூனிட் உற்பத்தி மைல்கல்லை எட்டியது. மேலும், கடந்த ஜூலை மாதம், ரெனால்ட்-நிசான் கூட்டணி 25 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்து, அதில் 10 லட்சத்துக்கும் அதிகமான யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு, மிகப்பெரிய உற்பத்தி மைல்கல்லை எட்டியது. இந்த சாதனை, இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அதன் வளர்ந்து வரும் பிரபலத்தையும் காட்டுவதாக உள்ளது. இதற்கிடையே, ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ள தள்ளுபடியால், இதர கார் நிறுவனங்களும் தள்ளுபடியை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கூடுதலாக, இது கார் விற்பனையை அதிகரிப்பதோடு, இந்திய வாகனத் துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடும்.