NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / X440 பைக்கின் விலையை உயர்த்தி அறிவித்திருக்கும் ஹார்லி டேவிட்சன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    X440 பைக்கின் விலையை உயர்த்தி அறிவித்திருக்கும் ஹார்லி டேவிட்சன்
    X440 பைக்கின் விலையை உயர்த்தி அறிவித்திருக்கும் ஹார்லி டேவிட்சன்

    X440 பைக்கின் விலையை உயர்த்தி அறிவித்திருக்கும் ஹார்லி டேவிட்சன்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 02, 2023
    03:46 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த மாதத் தொடக்கத்தில் இந்தியாவின் தொடக்கநிலை ப்ரீமியம் பைக் பிரிவில், தங்களுடைய முதல் பைக்கான X440-யை அறிமுகப்படுத்தியது அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரீமியம் பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன்.

    இந்தியாவைச் சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய பைக்கை வெளியிட்டது ஹார்லி. பைக்கின் வடிவமைப்பு மற்றும் வெளியீட்டை ஹார்லி மேற்கொள்ள, இந்தியாவில் அதன் உற்பத்தி மற்றும் சர்வீஸை பார்த்துக் கொள்ளவிருக்கிறது ஹீரோ.

    இந்தியாவில் ரூ.2.29 லட்சம் முதல் ரூ.2.69 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் மூன்று வேரியன்ட்களாக புதிய X440-யை அறிமுகம் செய்திருந்தது ஹார்லி டேவிட்சன். ஆனால், தற்போது அந்த பைக்கின் விலையை உயர்த்தி அறிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

    ஹார்லி டேவிட்சன்

    விலை உயரும் ஹார்லி டேவிட்சன் X440: 

    அறிமுகப்படுத்தி ஒரு மாதமே ஆகியிருக்கும் நிலையில் தங்களது X440 பைக்கின் அனைத்து வேரியன்ட்களின் விலைகளையும் உயர்த்தியிருக்கிறது ஹார்லி டேவிட்சன்.

    X440-யின் மூன்று வேரியன்டகளின் விலையையும், ரூ.10,500 வரை உயர்த்தி அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். இதனைத் தொடர்ந்து, அடிப்படை வேரியன்டான டெனிமின் விலை ரூ.2.39 லட்சமாகவும், மிடில் வேரியன்டான விவிடின் விலை ரூ.2.59 லட்சமாகவும் உயர்ந்திருக்கிறது.

    ஹார்லி டேவிட்சன் X440-யின் டாப் எண்டான S வேரியன்டின் விலை ரூ.2.79 லட்சம் எக்ஸ்-ஷோரூமாக தற்போது அதிகரித்திருக்கிறது.

    தொடக்க விலையிலேயே புதிய X440 பைக்கை பெற விரும்புபவர்கள் ஆகஸ்ட் 3 (நாளை) வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். நாளையுடன் முதற்கட்ட முன்பதிவையும் நிறுத்தவிருப்பதாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் முன்பே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹார்லி டேவிட்சன்
    ப்ரீமியம் பைக்
    ஹீரோ

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஹார்லி டேவிட்சன்

    இந்தியாவில் வெளியானது ஹார்லி டேவிட்சனின் புதிய X440 பைக் ப்ரீமியம் பைக்
    ஹார்லி டேவிட்சன் X440-யின் இன்ஜினுடன் புதிய 440சிசி பைக்கை உருவாக்கும் ஹீரோ ஹீரோ
    இந்தியாவில் புதிய 440சிசி பைக்கை வெளியிடத் திட்டமிட்டு வரும் ராயல் என்ஃபீல்டு ராயல் என்ஃபீல்டு
    ஹார்லி டேவிட்சன் மற்றும் ட்ரையம்ப்புக்குப் எதிராக என்ன திட்டம் வைத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு? ராயல் என்ஃபீல்டு

    ப்ரீமியம் பைக்

    இந்த ஆண்டு இந்தியாவில் வெளியாகவிருக்கும் தொடக்கநிலை ப்ரீமியம் பைக்குகள் என்னென்ன? ராயல் என்ஃபீல்டு
    ஜூன் 16-ல் வெளியாகிறது அப்டேட் செய்யப்பட்ட ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் லைன்-அப் பைக்
    இந்தியாவில் விரைவில் வெளியாகிறது யமஹாவின் R3 மற்றும் MT-03 யமஹா
    பஜாஜூடன் கூட்டணி அமைத்து இந்தியாவில் புதிய பைக் மாடல்களை அறிமுகப்படுத்தியது ட்ரையம்ப் பஜாஜ்

    ஹீரோ

    அப்டேட் செய்யப்பட்ட 'HF டீலக்ஸ்' பைக்கை வெளியிட்டது ஹீரோ! பைக்
    மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஹீரோ பேஷன் ப்ளஸ் பைக்
    அடுத்து வெளியாகவிருக்கும் ஹீரோ பைக்குகள் என்னென்ன? பைக்
    புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R-ல் என்னென்ன மாற்றங்கள்? எப்போது வெளியீடு? ஆட்டோமொபைல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025