NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ரெய்டர் 125 பைக்கின் சூப்பர் ஸ்குவாடு ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை அறிமுகப்படுத்திய டிவிஎஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரெய்டர் 125 பைக்கின் சூப்பர் ஸ்குவாடு ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை அறிமுகப்படுத்திய டிவிஎஸ்
    டிவிஎஸ் ரெய்டர் 125 சூப்பர் ஸ்குவாடு ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள்

    ரெய்டர் 125 பைக்கின் சூப்பர் ஸ்குவாடு ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை அறிமுகப்படுத்திய டிவிஎஸ்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 14, 2023
    03:19 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்து வரும் 125சிசி பைக்கான ரெய்டரின் சூப்பர் ஸ்குவாடு எடிஷனை வெளியிட்டிருக்கிறது. இந்தப் புதிய ஸ்பெஷல் எடிஷனின் கீழ் இரண்டு புதிய நிறங்களில் ரெய்டர் 125-ஐ வெளியிட்டிருக்கிறது டிவிஎஸ்.

    முன்னதாக, தங்களுடைய என்டார்க் 125 ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிஷன் பலவற்றை வெளியிட்டிருக்கிறது டிவிஎஸ். அதனைத் தொடர்ந்து, தற்போது ரெய்டர் 125 மாடலுக்கும் வெளியிட்டிருக்கிறது.

    இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை, அமெரிக்காவைச் சேர்ந்த மார்வெல் நிறுவனத்தின் இரண்டு சூப்பர்ஹீரோக்களான ஐயர்ன் மேன் மற்றும் பிளாக் பேந்தர் ஆகிய கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிட்டிருக்கிறது டிவிஎஸ்.

    புதிய நிற மாற்றத்தைத் தவிர்த்து, வேறு எந்த வசதிகளோ அல்லது மாற்றங்களோ புதிய ரெய்டர் 125-ல் கொடுக்கப்படவில்லை அல்லது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    டிவிஎஸ்

    டிவிஎஸ் ரெய்டர் 125: சூப்பர் ஸ்குவாடு எடிஷன் 

    ஐயர்ன் மேன் கதாப்பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட மாடலில், கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களுடன், ஐயர்ன் மேன் போன்ற அடையாளத்தையும் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது கொடுத்திருக்கிறது டிவிஎஸ்.

    அதே போல், பிளாக் பேந்தர் கதாப்பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட ரெய்டர் மாடலில், கருப்பு மற்றும் ஊதா நிறங்களுடன், பிளாக் பேந்தரின் அடையாளத்தை பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது கொடுத்திருக்கிறது அந்நிறுவனம்.

    இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல்களிலும், எல்இடி முகப்பு விளக்குகள், எல்இடி DRL, சிங்கிள் சேனல் ABS, LCD டிஸ்பிளே ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    இந்தியாவில் இந்த சூப்பர் ஸ்குவாடு ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை, ரூ.98,919 எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது டிவிஎஸ் நிறுவனம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பைக்
    புதிய வாகனம் அறிமுகம்
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    இனி இருட்டிலும் தெளிவாக பார்க்கலாம்; புதிய இன்ஃப்ரா ரெட் காண்டாக்ட் லென்ஸ்களை உருவாக்கிய விஞ்ஞானிகள் கண் பராமரிப்பு
    ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸின் டாப் 2 கனவுக்கு வேட்டு வைத்த சிஎஸ்கே; குவாலிபயர் 1 வாய்ப்பு எந்த அணிக்கு கிடைக்கும்? ஐபிஎல் 2025
    ஐபிஎல் 2025 எஸ்ஆர்எச்vsகேகேஆர்: டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச்சு ஐபிஎல் 2025
    இந்தியாவில் ₹840க்கும் குறைவான விலையில் செயற்கைக்கோள் இன்டர்நெட் சேவை வழங்க ஸ்டார்லிங்க் திட்டம் ஸ்டார்லிங்

    பைக்

    இந்தியாவில் வெளியானது அப்டேட் செய்யப்பட்ட 'ட்ரைம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள்' லைன்அப் பைக் நிறுவனங்கள்
    வாகனக் காப்பீட்டை மாற்றுவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை! கார்
    உலக மோட்டார்சைக்கிள் தினம் இன்று மோட்டார்
    ரெய்டர் மற்றும் பல்சர் மாடல்களுக்குப் போட்டியாக ஹீரோவின் புதிய 125சிசி பைக் ஹீரோ

    புதிய வாகனம் அறிமுகம்

    யமஹா YZF-R3 vs நின்ஜா 400, எது சிறந்த தேர்வு? ஆட்டோமொபைல்
    இந்தியாவில் 'C3' மாடலின் டாப் வேரியண்டை வெளியிட்டது சிட்ரன்!  கார்
    புதிய '390 அட்வென்சர் X' பைக்கை வெளியிட்டுள்ளது கேடிஎம்! ஆட்டோமொபைல்
    நெக்ஸான் EV மேக்ஸின் டார்க் எடிஷனை வெளியிட்டது டாடா  டாடா மோட்டார்ஸ்

    ஆட்டோமொபைல்

    பேட்டரி மற்றும் எத்தனாலில் இயங்கும் சரக்கு வாகனங்களுக்கு கட்டணமில்லா அனுமதிச் சீட்டு தமிழ்நாடு
    குளோபல் NCAP-க்கு நிகராக அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படவிருக்கும் இந்தியாவிற்கான பாரத் NCAP இந்தியா
    இந்தியாவில் அடுத்து வெளியாகவிருக்கும் செடான்கள் செடான்
    ஐரோப்பாவில் புதிய எலெக்ட்ரிக் காரின் மாதிரியை சோதனை செய்து வரும் மாருதி எலக்ட்ரிக் கார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025