Page Loader
சீனாவின் BYD ஆட்டோமொபைல் நிறுவனத்தின் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு
சீனாவின் BYD ஆட்டோமொபைல் நிறுவனத்தின் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு

சீனாவின் BYD ஆட்டோமொபைல் நிறுவனத்தின் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு

எழுதியவர் Prasanna Venkatesh
Aug 02, 2023
02:13 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் வணிக நிறுவனங்களுக்கான எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனை செய்து வரும் சீன நிறுவனமான BYD மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன. சீனாவில் இருந்து தங்கள் எலெக்ட்ரிக் காருக்கான பாகங்களை இறக்குமதி செய்து, பின்னர் இந்தியாவில் அசெம்பிள் மட்டும் செய்து விற்பனை செய்து வருகிறது BYD. இந்தியாவில் முழுமையாகக் கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது, 70% முதல் 100% வரை இறக்குமதி வரியும், இறக்குமதி செய்யப்படும் பாகங்கள் மீது 15% முதல் 35% வரையிலான இறக்குமதி வரியும் விதிக்கப்பட்டிருக்கிறது. எனினும், பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளிட்ட பாகங்களையும் சேஸியில் கட்டமைக்கப்படாமல் இறக்கமதி செய்யப்படும் போது தான், இரண்டாவதாகக் கூறிய இறக்குமதி வரிகள் பொருந்தும்.

BYD

எவ்வளவு வரி ஏய்ப்பு செய்திருக்கிறது BYD:

ஆனால், BYD நிறுவனமானது சேஸியில் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்களைக் கட்டமைத்தே இந்தியாவில் இறக்குமதி செய்திருக்கிறது. அப்படியென்றால் முதலில் கூறிய வகையில் 70% முதல் 100% வரையிலான இறக்குமதி வரியைச் செலுத்த வேண்டும். BYD நிறுவனவோ, 15%-35% வரையிலான இறக்குமதி வரியையே செலுத்தி வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்தே வரியைக் குறைத்துச் செலுத்தியிருப்பதாக அந்நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ரூ.75 கோடி அளவிலான இந்த வரிஏய்ப்பை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம்(DRI) கண்டறிந்த பின்பு, அத்தொகையை செலுத்திவிட்டது BYD. எனினும், வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகையின் மீது வரிக் கட்டணம் மற்றும் அபராதம் ஆகியவை விதிக்கப்பட்ட பிறகு அந்நிறுவனம் செலுத்த வேண்டியிருக்கும். இது குறித்த இறுதிக்கட்ட அறிக்கையை DRI விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.