NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்தியிருக்கும் ஓலா
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்தியிருக்கும் ஓலா
    புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்தியிருக்கும் ஓலா

    இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்தியிருக்கும் ஓலா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 15, 2023
    01:56 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்களுடைய ஃப்ளாக்ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான S1 ப்ரோவின் அப்டேட்டட் மாடலான 'S1 ப்ரோ ஜென் 2' மாடலை வெளியிட்டிருக்கிறது ஓலா. பவர்ஃபுல் இன்ஜின் மற்றும் கூடுதல் ரேஞ்சுடன் ஓலாவின் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்கூட்டர் வெளியாகியிருக்கிறது.

    இந்த புதிய ஸ்கூட்டரில், தாங்களே சொந்தமாகத் தயாரித்த எலெக்ட்ரிக் மோட்டாரைப் பயன்படுத்தியிருக்கிறது ஓலா. 11kW பவரை வெளிப்படுத்தும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது தற்போது அதிகபட்சமாக 120கிமீ வேகம் வரை செல்லும் திறனுடன் இருக்கிறது.

    அதே 4kWh பேட்டரி பேக்குடன், 195கிமீ ரேஞ்சைக் கொடுக்கும் வகையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வடிவமைத்திருக்கிறது ஓலா.

    6.5 மணி நேரத்தில் முழுமையாகச் சார்ஜ் ஆகிவிடும் இந்த ஸ்கூட்டரை, ரூ.1.47 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

    ஓலா

    ஓலாவின் பிற அறிமுகங்கள்: 

    இந்த புதிய ஃப்ளாக்ஷிப் எலெக்ட்ரிக் S1 ப்ரோ ஜென் 2-வுடன், தங்களது விலை குறைவான ஸ்கூட்டர் லைன்அப்பையும் வெளியிட்டிருக்கிறது ஓலா.

    'S1 X' என்ற இந்த புதிய லைன்அப்பில், S1 ஏரை விட குறைவான விலையில் மூன்று புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.

    S1 X(2kW) மாடலை ரூ.89,999 விலையிலும், S1 X மாடலை ரூ.99,999 விலையிலும், S1 X+ மாடலை ரூ.1,09,999 விலையிலும் வெளியிட்டிருக்கிறது ஓலா. இந்த மூன்று மாடல்களுக்கும் ஆகஸ்ட் 21 வரை அறிமுக சலுகையாக ரூ.10,000 தள்ளுபடியும் வழங்கியிருக்கிறது அந்நிறுவனம்.

    ஓலாவின் இந்தப் புதிய மாடல்களை அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தின் மூலமாகவோ அல்லது அருகிலிருக்கும் ஓலா ஷோரூம்களிலோ முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிரக்கப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஓலா
    எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    கராச்சியில் 4 நாட்களில் 26 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன நிலநடுக்கம்
    மொழி சர்ச்சையில் "எனக்கு ஆதரவாக நின்றதற்கு தமிழகத்திற்கு நன்றி": கமல்ஹாசன் கமல்ஹாசன்
    வரலாற்று சிறப்புமிக்க கத்ரா-ஸ்ரீநகர் ரயில் சேவையை பிரதமர் மோடி சனிக்கிழமை துவங்கி வைக்கிறார்  பிரதமர் மோடி
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்றம்

    ஓலா

    Ola S1 Air புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 பேட்டரி வேரியண்ட் அறிமுகம்! இந்தியா
    Ampere Primus v/s Ola S1: எது சிறந்த தேர்வாக இருக்கும்? எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    தமிழக அரசுடன் ஓலா நிறுவனம் மிகப்பெரிய ஒப்பந்தம்! 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு எலக்ட்ரிக் வாகனங்கள்
    ஒரே நாளில் 50 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை திறந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

    எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

    இந்தியாவில் அதிகரிக்கும் EV மோகம்; ஒரு பார்வை எலக்ட்ரிக் வாகனங்கள்
    புதிய வண்ணங்களில் அறிமுகம் ஆகியுள்ளது ஓலா எஸ்1, எஸ்1 ப்ரோ 'கெருவா' எலக்ட்ரிக் வாகனங்கள்
    டிவிஎஸ் XLஐ பின்னுக்குத் தள்ள வரும் எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! ஆட்டோமொபைல்
    130கிமீ பயணம் செய்யும் ஒகாயா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! ஆட்டோமொபைல்

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் அடுத்து வெளியாகவிருக்கும் செடான்கள் செடான்
    ஐரோப்பாவில் புதிய எலெக்ட்ரிக் காரின் மாதிரியை சோதனை செய்து வரும் மாருதி எலக்ட்ரிக் கார்
    மஹிந்திரா தார் ஜீப்பை ஸ்டைலாக ஓட்டும் அமிதாப் பச்சன்; வைரலாகும் வீடியோ மஹிந்திரா
    இந்தியாவில் வெளியானது மாருதியின் ஃப்ளாக்ஷிப் மாடலான 'இன்விக்டோ' மாருதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025