Page Loader
புதிய பைக் ஒன்றை வெளியிடவிருக்கும் டிவிஎஸ், RTR 310? அல்லது RTX?
இந்தியாவில் டிவிஎஸ் விற்பனை செய்து வரும் RR 310 மாடல்

புதிய பைக் ஒன்றை வெளியிடவிருக்கும் டிவிஎஸ், RTR 310? அல்லது RTX?

எழுதியவர் Prasanna Venkatesh
Aug 11, 2023
04:31 pm

செய்தி முன்னோட்டம்

வரும் செப்டம்பர்-6ம் தேதி புதிய பைக் ஒன்றை வெளியிடவிருக்கிறது டிவிஎஸ். அந்நிறுவனம் ஒரு பைக்கை வெளியிடுவதற்கு முன் அவ்வப்போது அதன் ஸ்பைஷாட் படங்கள் இணையத்தில் கசியும். அதேபோல், தற்போது டிவிஎஸ் பைக் ஒன்று இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வந்த போது ஸ்பைஷாட்டில் சிக்கியிருக்கிறது. இந்த ஸ்பைஷாட்டை வைத்துப் பார்க்கும் போது, டிவிஎஸ் RR 310 மாடலின் நேக்கட் வெர்ஷனையே டிவிஎஸ் அடுத்த மாதம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், RR 310 பைக்கில் பயன்படுத்திய அதே இன்ஜினையே புதிய பைக்கிலும் டிவிஎஸ் பயன்படுத்தியிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமீபத்தில் RTX என்ற பெயரை பதிவு செய்தது டிவிஎஸ். எனவே, புதிய பைக்கை RTX என்ற பெயரில் டிவிஸ் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் இருக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

ஸ்பைஷாட்டில் சிக்கிய புதிய டிவிஸ் பைக்: