
க்ரெட்டா மற்றும் அல்கஸார் அட்வென்சர் எடிஷன் மாடல்களை வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய்
செய்தி முன்னோட்டம்
தங்களுடைய க்ரெட்டா மற்றும் அல்கஸார் கார் மாடல்களின் அட்வென்சர் எடிஷன்களை வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய். க்ரெட்டா மாடலானது ஏற்கனவே, நைட் எடிஷன் ஒன்றைப் பெற்றிருக்கும் நிலையில், அல்கஸாருக்கு இதுவே முதல் சிறப்பு எடிஷன் மாடலாகும்.
க்ரெட்டாவின் பெட்ரோல் இன்ஜின் கொண்ட மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியன்டகளுடன் இந்த அட்வென்சர் எடிஷனை வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய்.
ஆனால், அல்கஸாரின் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் கொண்ட நான்கு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களுடன் புதிய அட்வென்சர் எடிஷனை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வாகன் டைகூன் ஆகிய மாடல்களின் ஸ்பெஷல் எடிஷன்களுக்குப் போட்டியாக க்ரெட்டா அட்வென்சர் எடிஷனையும், டாடா சஃபாரி ஸ்பெஷல் எடிஷன் மாடல்களுக்குப் போட்டியாக அல்கஸார் அட்வென்சர் எடிஷனையும் வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய்.
ஹூண்டாய்
க்ரெட்டா மற்றும் அல்சஸார் அட்வென்சர் எடிஷன்: என்னென்ன மாற்றங்கள்
புதிய அட்வென்சர் எடிஷன்களில் இரண்டு மாடல்களிலும் டேஷ்கேமைக் கொடுத்திருக்கிறது ஹூண்டாய். இது முன்னர் எக்ஸ்டர் மற்றும் வென்யூ N லைன் ஆகிய மாடல்களில் அந்நிறுவனம் கொடுத்திருந்தது.
முன்பக்கம், கருப்பு நிற ஹூண்டாய் லோகோவுடன், கருப்பு நிற கிரில்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. முன்பக்க ஃபெண்டரில் அட்வென்சர் என்ற பேட்ச் வழங்கப்பட்டிருக்கிறது.
புதிய ரேஞ்சர் காக்கி நிறத்தில் இரண்டு மாடல் அட்வென்சர் எடிஷன்களையும் வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய். மேலும், உள்பக்கம் ஏசி வென்ட் மற்றும் ஸ்விட்களில் சேஜ் கிரீன் நிறத்துடன், முழுவதும் கருப்பு நிற இன்டீரியர் கொடுக்கப்பட்டிருக்கிறது.
க்ரெட்டாவின் அட்வென்சர் எடிஷனானது ரூ.15.17 லட்சம் எக்ஸ்-ஷோரூம் தொடக்க விலையிலும், அல்கஸாரின் அட்வென்சர் எடிஷனானது ரூ.19.04 லட்சம் எக்ஸ்-ஷோரூம் தொடக்க விலையிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.