'அஸூரா' என்ற பெயரை டிரேடுமார்க்கிற்குப் பதிவு செய்த டாடா மோட்டார்ஸ்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் அஸூரா (Azura) என்ற பெயரை டிரேடுமார்க்கிற்காகப் பதிவு செய்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். இந்தப் புதிய டிரேடுமார்க் பெயரானது, அந்நிறுவனம் இந்தாண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்திய கர்வ் கான்செப்ட் மாடலின் தயாரிப்பு வடிவமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ப்யூச்சரிஸ்டிக்கான லுக்குடன், கூப் போன்ற டிசைனில் புதிய கான்செப்ட் எஸ்யூவியான கர்வ்வை இந்தாண்டு டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தது டாடா மோட்டார்ஸ்.
புதிய அஸூரா மாடலின் எலெக்ட்ரிக் மற்றும் எரிபொருள் இன்ஜின் கொண்ட வடிவம் என இரண்டு வகையான கார்களை டாடா மோட்டார்ஸ் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
டாடா மோட்டார்ஸ்
டாடா அஸூரா எஸ்யூவி:
இந்தப் புதிய அஸூராவின் எலெக்ட்ரிக் மாடலானது, அடுத்த ஆண்டும், அதனைத் தொடர்ந்து 2025ம் ஆண்டு இதன் எரிபொருள் இன்ஜின் கொண்ட மாடலும் வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
நாளை மேம்படுத்தப்பட்ட புதிய நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் வெளியிடவிருக்கிறது டாடா. இந்தப் புதிய நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்டில் இரண்டாம் தலைமுறை எலெக்ட்ரிக் பவர்ட்ரெயினை டாடா பயன்படுத்தியிருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதே பவர்ட்ரெயினையே அஸூராவிலும் டாடா பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆல் வீல் டிரைவ் வசதியுடன், முழுமையான சார்ஜில் 450 கிமீ ரேஞ்சைக் கொண்டு புதிய அஸூரா வெளியிடப்படவும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
இது குறித்த அதிகராப்பூர்வ அறிவிப்பை டாடா விரைவில் வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.