இந்தியாவில் வெளியானது '2024 ட்ரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 1200'
இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட 2024 ஸ்கிராம்ப்ளர் 1200 மாடல் ப்ரீமியம் பைக்கை வெளியிட்டிருக்கிறது ட்ரையம்ப். முன்ப விற்பனையில் இருந்த XC வேரியன்டுக்கு மாற்றாக X வேரியன்டையும், அப்டேட் செய்யப்பட்ட டாப்-எண்டு XE வேரியன்டையும் வெளியிட்டிருக்கிறது ட்ரையம்ப். புதிய ஸ்கிராம்ப்ளர் 1200-ன் X வேரியன்டில் ஐந்து ரைடிங் மோடுகள், நிஸான் ட்வின் பிஸ்டல் ஆக்ஸியல் காலிபர்கள் ஆகியவற்றைக் கொடுத்திருக்கிறது ட்ரையம்ப். XE வேரியன்டில் ஆஃப் ரோடு ப்ரோ மோடுடன் சேர்த்து ஆறு ரைடிங் மோடுகள், இனர்ஷியல் மெஷர்மெண்ட் யூனிட், கார்னரிங் ஏபிஎஸ், கார்னரிங் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் பிரெம்போ ஸ்டைலெமா ரேடியல் மோனோபிளாக் பிரேக் காலிப்பர்களைக் கொடுத்திருக்கிறது ட்ரையம்ப். இரண்டு வேரியன்ட்களிலும் கலர் TFT டிஸ்பிளே கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்களை அளித்திருக்கிறது ட்ரையம்ப்.
2024 ட்ரையம்ப் ஸ்கிராம்பளர் 1200: இன்ஜின் மற்றும் விலை
இந்த இரண்டு ப்ரீமியம் ஸ்கிராம்பளர் பைக்குகளிலுமே 89hp பவர் மற்றும் 110Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 1200சிசி போனவில்லி ட்வின் சிலிண்டர் இன்ஜினைக் கொடுத்திருக்கிறது ட்ரையம்ப். இரண்டு மாடல்களிலுமே டியூபுலார் ஸ்டீல் பிரேம்கள் மற்றும் அலுமினியம் ரிம்களுடன் கூடிய வயர் ஸ்போக் வீல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் 2024 ஸ்கிராம்ப்ளர் 1200 மாடலின் X வேரியன்டை ரூ.11.83 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், XE வேரியன்டை ரூ.13.18 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியிட்டிருக்கிறது ட்ரையம்ப். இந்தியாவின் ப்ரீமிம்ய ஸ்கிராம்ப்ளர் பிரிவில் ப்ரீமியம் பைக் சந்தையில் நுழைந்திருக்கும் இந்த 2024 ஸ்கிராம்ப்ளர் 1200 மாடலின் டெலிவரியை 2024 ஜனவரியில் துவங்கவிருக்கிறது ட்ரையம்ப்.