
புதிய ஃபேஸ்லிஃப்டட் ஜீப்புக்கு மாற்றாக இந்தியாவில் விற்பனையாகி வரும் கார்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் தங்களுடைய காம்பஸ் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜீப் நிறுவனம். புதிய ஃபேஸ்லிஃப்டில் 2 வீல் டிரைவ் டீசல் ஆட்டோமேட்டிக் கான்பிகரேஷனிலும் விற்பனைக்கு வந்திருக்கிறது ஜீப்.
புதிய காம்பஸில், டூயல் டோன் டேஷ்போர்டு, ப்ரீமியம் அப்ஹோல்ஸ்ட்ரி, வென்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்கள், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், டூயல்-ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகிய வசதிகளைக் கொடுத்திருக்கிறது ஜீப்.
ரூ.20.49 லட்சம் விலையில் வெளியாகியிருக்கும் புதிய காம்பஸ் மாடலுக்குப் போட்டியாக, நான்கு மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
டாடா ஹேரியர், ஃபோக்ஸ்வாகன் டைகூன், ஹூண்டாய் டூஸான் மற்றும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ-N ஆகிய மாடல்கள் காம்பஸூக்குப் போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
கார்
டாடா ஹேரியர்:
விலை: ரூ.24.27 லட்சம்
வெண்டிலேட்டட் சீட்கள், ஏர் ப்யூரிஃபையருடன் கூடிய ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பலவித டிரைவிங் மோடுகள், 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே மற்றும் ஆறு ஏர்பேக்குகளுடன் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது டாடா ஹேரியர்.
இந்த ஹேரியரில் 168hp பவரை வெளிப்படுத்தகூடிய 2.0-லிட்டர் டர்போ டீசல் இன்ஜினைக் கொடுத்திருக்கிறது டாடா.
ஃபோக்ஸ்வாகன் டைகூன்:
விலை: ரூ.19.46 லட்சம்
டூயல் டோன் டேஷ்போர்டு, எலெக்ட்ரிக் சன்ரூஃப், 10.0 இன்ச் டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் பேனல் மற்றும் 8.0 இன்ச் டிஜிட்டல் இன்ட்ரூமெண்ட் கிளஸ்டருடன், 5 சீட்டராக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது டைகூன்.
இந்த டைகூனில் 148hp பவரை உற்பத்தி செய்யக்கூடிய 1.5-லிட்டர் TSI EVO இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது ஃபோக்ஸ்வாகன்.
ஆட்டோ
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ-N:
விலை: ரூ.24.52 லட்சம்
ஆறு அல்லது ஏழு சீட்டர் தேர்வுகளுடன், சன்ரூஃப், ஆறு ஏர்பேக்குகள், 12 ஸ்பீக்கர்கள் கொண்ட சோனி ஆடியோ சிஸ்டம் மற்றும் 8.0 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் பேனல்களைக் கொண்டிருக்கிறது ஸ்கார்ப்பியோ-N.
இந்த ஸ்கார்ப்பியோ-N மாடலில், 2.0-லிட்டர் எம்ஹாக் டீசல் மற்றும் எம்ஸ்டாலியன் டர்போ பெட்ரோல் இன்ஜின்களைப் பயன்படுத்தியிருக்கிறது மஹிந்திரா.
ஹூண்டாய் டூஸான்:
விலை: ரூ.28.63 லட்சம்
வெண்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், டூயல்-ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்டு சிஸ்டம், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் இரண்டாம் நிலை ADAS பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது டூஸான்.
இந்த மாடலில் 2.0-லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0-லிட்டர் டீசல் இன்ஜின்களைப் பயன்படுத்தியிருக்கிறுத ஹூண்டாய்.