NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / புதிய 'C3 ஏர்கிராஸ்' எஸ்யூவியின் விலை விபரங்களை வெளியிட்ட சிட்ரன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய 'C3 ஏர்கிராஸ்' எஸ்யூவியின் விலை விபரங்களை வெளியிட்ட சிட்ரன்
    புதிய 'C3 ஏர்கிராஸ்' எஸ்யூவியின் விலை விபரங்களை வெளியிட்ட சிட்ரன்

    புதிய 'C3 ஏர்கிராஸ்' எஸ்யூவியின் விலை விபரங்களை வெளியிட்ட சிட்ரன்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 05, 2023
    04:04 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த செப்டம்பர் 15ம் தேதியன்று இந்தியாவில் புதிய C3 ஏர்கிராஸ் எஸ்யூவி அறிமுகப்படுத்தியது சிட்ரன். ஹூண்டாய் கிரெட்டாவுடன் போட்டியிடும் இந்தப் புதிய மாடலை யூ, பிளஸ் மற்றும் மேக்ஸ் என மூன்று வேரியன்ட்களாக விற்பனை செய்யவிருக்கிறது அந்நிறுவனம்.

    இந்த மாடலின் தொடக்க நிலை வேரியன்டின் விலையை மட்டும் அந்நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், தற்போது பிற வேரியன்ட்களின் விலைகள் குறித்த விபரங்களையும் வெளியிட்டிருக்கிறது சிட்ரன்.

    இந்தியாவில் ரூ.9.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கும் சிட்ரன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி மாடலின் டெலிவரிக்களை இந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் துவக்கத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

    மூன்று வேரியன்ட்களாக, 5 மற்றும் 7 சீட்டர் தேர்வுகளில் 10 நிறத் தேர்வுகளுடன் அறிமுகமாகியிருக்கிறது சிட்ரன் C3 ஏர்கிராஸ்.

    சிட்ரன்

    சிட்ரன் C3 ஏர்கிராஸ்: விலை 

    ஐந்து சீட்கள் கொண்ட சிட்ரன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி மாடலின் யூ வேரியன்டானது ரூ.9.99 லட்சம் ரூபாயில் விற்பனை செய்யப்படவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, பிளஸ் மற்றும் மேக்ஸ் வேரியன்ட்களுக்கு ரூ.11.34 லட்சம் மற்றும் ரூ.11.99 லட்சம் விலையை நிர்ணயித்திருக்கிறது சிட்ரன்.

    5+2 சீட்கள் கொண்ட சிட்ரன் C3 மாடலில் யூ வேரின்ட் இல்லை, பிளஸ் மற்றும் மேக்ஸ் வேரியன்ட்கள் மட்டுமே. இதில் பிளஸ் வேரியன்டானது ரூ.11.69 லட்சம் விலையிலும், மேக்ஸ் வேரியன்டானது ரூ.12.34 லட்சம் விலையிலும் விற்பனை செய்யப்படவிருக்கிறது.

    இந்த சிட்ரன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவியில் 109hp பவர் மற்றும் 190Nm டார்க்கை உற்பத்தி செய்யும், 6-ஸ்பீடு கியர்பாக்ஸூடன் இணைக்கப்பட்ட 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினைக் கொடுத்திருக்கிறது சிட்ரன்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எஸ்யூவி
    கார்
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    எஸ்யூவி

    உற்பத்தி அளவை உயர்த்த திட்டமிடும் மஹிந்திரா.. ஏன்? மஹிந்திரா
    தார் vs ஜிம்னி.. என்னென வசதிகள் ஜிம்னியில் இருக்கின்றன? மாருதி
    இந்தியாவில் அறிமுகமானது ஹோண்டாவின் புதிய 'எலிவேட்'.. என்னென்ன வசதிகள்? ஹோண்டா
    இந்தியாவில் வெளியானது 'மாருதி சுஸூகி ஜிம்னி'.. விலை என்ன? மாருதி

    கார்

    இந்தியாவில் விற்பனையாகி வரும் ஆஃப்-ரோடு எஸ்யூவி மாடல் கார்கள் எஸ்யூவி
    என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கின்றன மாருதி ஃப்ரான்க்ஸின் CNG வேரியன்ட்கள் மாருதி
    இந்தியாவில் 'கேயன்' மற்றும் 'கேயன் கூப்' மாடல்களை வெளியிட்டது போர்ஷே போர்ஷே
    ட்விட்டரில் வைரலான தோனியின் பைக் கலெக்ஷன் குறித்த காணொளி பைக்

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் புதிய கரிஸ்மா XMR பைக்கை வெளியிட்டுள்ளது ஹீரோ ஹீரோ
    இந்தியாவில் 5.4 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் மாருதி சுஸூகி மாருதி
    இந்தியாவில் புதிய புல்லட் 350 மாடலை வெளியிட்டுள்ளது ராயல் என்ஃபீல்டு ராயல் என்ஃபீல்டு
    இந்தியாவில் இந்த செப்டம்பரில் வெளியாகவிருக்கும் எஸ்யூவிக்கள் எஸ்யூவி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025