NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இந்தியாவில் செல்டோஸ் மற்றும் கேரன்ஸின் விலையை உயர்த்தும் கியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் செல்டோஸ் மற்றும் கேரன்ஸின் விலையை உயர்த்தும் கியா
    இந்தியாவில் செல்டோஸ் மற்றும் கேரன்ஸின் விலையை உயர்த்தும் கியா

    இந்தியாவில் செல்டோஸ் மற்றும் கேரன்ஸின் விலையை உயர்த்தும் கியா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 25, 2023
    10:40 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் விற்பனையாகி வரும் தங்களுடைய செல்டோஸ் எஸ்யூவி மற்றும் கேரன்ஸ் எம்பிவி மாடல்களின் விலையை உயர்த்தியிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது தென்கொரியாவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான கியா.

    இந்தியாவில் செல்டோஸ், கேரன்ஸ், சொனெட், கார்னிவல் மற்றும் EV6 என ஐந்து கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது கியா நிறுவனம். இந்நிலையில், செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் ஆகிய இரண்டு கார் மாடல்களின் விலையை மட்டும் 2% வரை உயர்த்தியிருப்பதாக அறிவித்திருக்கிறது கியா.

    இந்த விலை உயர்வானது வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம். இந்த ஆண்டு ஏப்ரல் மாதமும், செல்டோஸ் மற்றும் கேரன்ஸின் விலைகளை கியா உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

    கியா

    ஏன் விலையை உயர்த்துகிறது கியா?

    மூலப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த போதிலும், முடிந்தளவிற்கு விலையை உயர்த்தாமல் கட்டுக்குள் வைத்திருந்ததாகவும், தற்போது விலையை உயர்த்துவது தான் ஒரே வழி எனவும் தங்களுடைய அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது கியா நிறுவனம்.

    தங்களது மற்ற மூன்று மாடல்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறது கியா.

    கடந்த ஜூலை மாதம் செல்டோஸ் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம். அறிமுகத்தைத் தொடர்ந்து இரண்டே மாதங்களில் 50,000 முன்பதிவை பெற்றிருக்கிறது செல்டோஸ்.

    மேலும், செல்டோஸின் காத்திருப்புக் காலத்தைக் குறைக்க GTX+ (S) மற்றும் X-Line (S) என இரண்டு புதிய செல்டோஸ் வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது கியா. தற்போது ரூ.10.89 லட்சம்-ரூ.20 லட்சம் வரையான விலையில் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது செல்டோஸ்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கியா
    எஸ்யூவி
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி

    கியா

    Kia Seltos 2023; அற்புதமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது! ஆட்டோமொபைல்
    20 லட்ச ரூபாய்க்கும் குறைவு: இந்தியாவின் டாப் 5 எம்பிவி கார்களின் பட்டியல் கார்
    கார்களில் திருடுவதைத் தவிர்க்க புது முயற்சியை கையில் எடுத்த ஹூண்டாய், கியா நிறுவனங்கள்; ஹூண்டாய்
    மாருதி டாடா நிறுவனத்துக்கு சவால் விடும் புதிய கார்! கார்

    எஸ்யூவி

    கியா சோனெட்டின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்.. எப்போது? என்ன மாற்றங்கள்? கியா
    சன்ரூஃபுடன் கூடிய மஹிந்திரா 5 டோர் தார்.. எப்போது வெளியீடு? மஹிந்திரா
    உற்பத்தி அளவை உயர்த்த திட்டமிடும் மஹிந்திரா.. ஏன்? மஹிந்திரா
    தார் vs ஜிம்னி.. என்னென வசதிகள் ஜிம்னியில் இருக்கின்றன? மாருதி

    ஆட்டோமொபைல்

    சமூக வலைத்தளங்களில் வைரலான நடிகர் மாதவனின் சூப்பர்பைக் கலெக்ஷன் ப்ரீமியம் பைக்
    இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட டியூக் லைன்அப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது கேடிஎம் கேடிஎம்
    நான்கு கியர்பாக்ஸ் தேர்வுகளைப் பெறவிருக்கும் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் டாடா மோட்டார்ஸ்
    இந்தியாவில் வெளியானது டிவிஎஸ்ஸின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான 'எக்ஸ்' (X) எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025