மூன்றாம் தரப்பு வாகனக் காப்பீடு என்றால் என்ன? வாகனக் காப்பீடு ஏன் அவசியம்?
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வைத்திருப்பவர்கள் முக்கியமாக வைத்திருக்க வேண்டிய மூன்று ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம், வாகனத்திற்கான ஆவணம் மற்றும் வாகனக் காப்பீடு. ஓட்டுநர் உரிமத்தையும், வாகனத்திற்கான ஆவணங்களையும் அனைவரும் சரியாகவும் கவனமாகவும் வைத்திருப்பார்கள். ஆனால், வாகனத்திற்கான காப்பீட்டை நிறைய வாகன உரிமையாளர்கள் சரியாக பராமரிப்பதில்லை. முக்கியமாக இருசக்கர வாகன உரிமையாளர்கள். தங்களுடைய இருசக்கர வாகனத்திற்கான காப்பீட்டைத் செய்திருக்கும் உரிமையாளர்களும் கூட, காப்பீடு இல்லாமல் வாகனத்தை இயக்குவது சட்டத்திற்கு புறம்பானது என்பதால் தான். வாகனக் காப்பீடு ஏன் முக்கிம். அவற்றுள் மூன்றாம் தரப்பு காப்பீடு எதற்காகக் கொடுக்கப்படுகிறது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
வாகனக் காப்பீடு:
ஒரு வாகனத்தை நாம் வாங்கும் போதே, முதலில் குறிப்பிட்ட காலத்திற்கா காப்பீடு செய்யப்பட்டு அதற்கான தொகையையும் நாம் வாங்கும் வாகனத்தின் விலையுடன் சேர்த்திருப்பார்கள். அந்தக் குறிப்பிட்ட வாகனக் காப்பீட்டுக் காலம் முடிந்தவுடன், ஒவ்வொரு ஆண்டும் நமது வாகனத்திற்கான காப்பீட்டை புதுப்பிக்க வேண்டியது அவசியம். பெரும்பாலான இருசக்கர வாகனங்களுக்கு, அந்த வாகனங்களை வாடிக்கையாளர்கள் வாங்கும்போதே, சொந்தச் சேதங்களுக்கான காப்பீட்டுடன் மூன்றாம் தரப்பு காப்பீட்டையும் சேர்த்த வழங்கியிருப்பார்கள். சொந்த சேதங்களுக்கான காப்பீடு என்பது நம்முடைய வாகனத்திற்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கான பழுது நீக்குவதற்கான அல்லது காப்பீட்டை வழங்கும் திட்டமாகும். மூன்றாம் தரப்பு காப்பீடு என்பது நம்மால் பிறருடைய வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கான நிதி உதவியை காப்பீடு நிறுவனங்கள் அளிக்கும் வகையிலான வசதியாகும்.
வாகனக் காப்பீடு ஏன் முக்கியம்?
இயற்கைப் பேரிடர் முதல் சாலை விபத்து வரை பல்வேறு வகைகளில் நம்முடைய வாகனம் சேதமடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதுபோன்ற சமயங்களில் நிதி வசதியை அளிக்கின்றன காப்பீட்டுத் திட்டங்கள். சிலர் மூன்றாம் தரப்புக் காப்பீடு அவசியமில்லை எனக் கருதுகிறார்கள். ஆனால், மூன்றாம் தரப்பு காப்பீடு இல்லாமல் வாகனத்தை இயக்குவதும் சட்டத்திற்குப் புறம்பானது தான். மேலும், மூன்றாம் தரப்பு காப்பீட்டைப் பராமரிப்பது நிதி உதவிகளை அளிப்பதோடு மட்டுமல்லாமல் சட்ட சிக்கல்களிலிருந்து நம்மைக் காப்பாற்றும். தமிழகத்தில் வாகனக் காப்பீடு இல்லமல் வாகனத்தை இயக்கினால் ரூ.2000 முதல் ரூ.4000 வரை அபராதமும், தொடர்ந்து வாகனக் காப்பீடு இல்லாமலேயே வாகனத்தை இயக்கினால் சிறைத் தண்டனை கூட வழங்கப்படலாம்.