ரூ.33 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியானது 'BMW M 1000 R' பைக்
இந்தியாவில் தங்களுடைய புதிய விலையுயர்ந்த ப்ரீமியம் பைக் மாடலான 'M 1000 R' பைக்கை வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. என்னென்ன வசதிகளுடன், என்ன விலையில் வெளியாகியிருக்கிறது இந்தப் புதிய பிஎம்டபிள்யூ M 1000 R? பிஎம்டபிள்யூவின் இந்த ஃப்ளாக்ஷிப் நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கில் எல்இடி விளக்குகள், 6.5 TFT திரை, பின்பக்க யுஎஸ்பி சார்ஜிங் சாக்கெட், எலெக்ட்ரானிக் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், பாதுகாப்பிற்காக த்ராட்டில் கண்ட்ரோல், இன்ஜின் பிரேக், ட்ராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், ஏபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் ப்ரோ ஆகிய வசதிளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
பிஎம்டபிள்யூ M 1000 R: இன்ஜின் மற்றும் விலை
இந்தப் புதிய ப்ரீமியம் பைக்கில் 209hp பவர் மற்றும் 113Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, நான்கு சிலிண்டர்களைக் கொண்ட, வாட்டர் கூல்டு 999சிசி இன்ஜினைக் கொடுத்திருக்கிறது பிஎம்டபிள்யூ. அதிகபட்சமாக 280 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய இந்த பைக்கானது, 0-100 கிமீ வேகத்தை வெறும் 3.2 நொடிகளில் எட்டிப் பிடிக்கிறது. ரெயின், ரோடு, டைனமிக், ரேஸ் மற்றும் ரேஸ் ப்ரோ என ஐந்து ரைடிங் மோடுகளைக் கொண்டிருக்கும் இந்த பைக்கானது ஸ்டாண்டர்டு மற்றும் காம்படிஷன் என இரண்டு வேரியன்ட்களாக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் M 1000 R மாடலின் ஸ்டாண்டர்டு வேரியன்டை, ரூ.33 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், காம்படிஷன் வேரியன்டை ரூ.38 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ.