Page Loader
இந்தியாவில் உயர்ந்த பயணிகள் வாகன மொத்த விற்பனை அளவு
இந்தியாவில் உயர்ந்த பயணிகள் வாகன மொத்த விற்பனை அளவு

இந்தியாவில் உயர்ந்த பயணிகள் வாகன மொத்த விற்பனை அளவு

எழுதியவர் Prasanna Venkatesh
Oct 02, 2023
03:15 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் பயணிகள் வாகனத்தின் மொத்த விற்பனை அளவானது கடந்த செப்டம்பர் மாதம் மிக அதிக அளவை எட்டியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னதாக, ஆகஸ்ட் மாதம் 3,60,700 வாகனங்கள் மொத்த விற்பனையாக அனுப்பப்பட்ட நிலையில், செப்டம்பரில் அது இன்னும் அதிரித்து 3,63,733 ஆக அதிகரித்திருக்கிறது. விழாக் காலத்தினால் அதிகரிகரித்த தேவையும், அதனை பூர்த்தி செய்யும் அளவு விநியோகத்திலிருந்த சிப்களுமே இந்த அதீத விற்பனை அளவிற்கான காரணமாகத் தெரிவித்திருக்கிறார் மாருதி சுஸூகியின் மூத்த நிர்வாக அதிகாரிகளுள் ஒருவரான சஷாங்க் ஸ்ரீவத்ஸவா. மாருதி சுஸூகி, ஹூண்டாய் மற்றும் டொயோட்டா உட்பட் அனைத்து நிறுவனங்களின் மொத்த விற்பனை அளவும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த செப்டம்பரில் அதிகரித்திருக்கிறது.

ஆட்டோ

கார் தயாரிப்பு நிறுவனங்களின் மொத்த விற்பனை நிலவரம்: 

இந்தியாவைச் சேர்ந்த முன்னணி எஸ்யூவி தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனம் கடந்த செப்டம்பருடன் ஒப்பிடும் போது, 20% அதிகமாக 41,267 கார்களா விற்பனை செய்திருக்கிறது. அதேபோல், இந்தியாவில் கார் விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் மாருதி சுஸூகியின் விற்பனை அளவானது 3% அதிகரித்து 1,81,343 என்ற அளவை எட்டியிருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை கடந்த ஆண்டு செப்டம்பருடன் ஒப்பிடும் போது 13% அதிகரித்து 71,641 ஆக இருக்கிறது. அதேபோல், டொயோட்டா நிறுவனத்தின் மொத்த விற்பனையானது 53% அதிகரித்து 23,590 ஆக இருக்கிறது. டாடா மோட்டார்ஸின் உள்நாட்டு விற்பனை அளவானது 2% அதிகரித்து 82,023 ஆகவும், எம்ஜி மோட்டார்ஸின் விற்பனை அளவு 31% அதிகரித்து 5,003 ஆகவும் இருக்கிறது.