இந்தியாவில் Q5 எஸ்யூவியின் லிமிடட் எடிஷன் மாடலை வெளியிட்டுள்ளது ஆடி
ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் Q5 எஸ்யூவி மாடலின் லிமிடட் எடிஷன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. Q5-யின் லைன்அப்பில் இருக்கும் டெக்னாலஜி வேரியன்டைக் கொண்டு மட்டுமே புதிய லிமிடட் எடிஷன் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆடி. மேலும், மைத்தோஸ் பிளாக் என்ற ஒற்றை நிறத்தில் மட்டுமே புதிய எடிஷனை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். வெளிப்புறம் ஆடி லோகோ ரிங்கில் தொடங்கி, கிரில், ரூஃப் ரெயில் மற்றும் விண்டோ ட்ரிம் ஸ்ட்ரிப்ஸ் வரை அனைத்தையும் புதிய லிமிடட் எடிஷனில் கருப்பு நிறத்தில் அளித்திருக்கிறது ஆடி.
ஆடி Q5 எஸ்யூவி லிமிடட் எடிஷன்: பிற வசதிகள் மற்றும் விலை
வெளிப்பக்கம் முழுமையாக கருப்பு நிறத்திற்கு மாறியிருக்கும் Q5 மாடலின் உள்புறம் ஒகாபி ப்ரௌன் நிறத்திலான சீட்களைக் கொடுத்திருக்கிறது ஆடி. 30-நிற ஆம்பியன்ட் லைட்டிங், 10 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், 19 ஸ்பீக்கர்களைக் கொண்ட B&O சவுண்டு சிஸ்டம் மற்றும் 12 இன்ட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஆகிய வசதிகளை புதிய Q5 லிமிடட் எடிஷனில் கொடுத்திருக்கிறது ஆடி. Q5-யில், 265hp பவரை உற்பத்தி செய்யக்கூடிய, 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸூடன் இணைக்கப்பட்ட, 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த Q5 லிமிடட் எடிஷனை, ரூ.69.72 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது ஆடி. இதன் ஸ்டாண்டர்டு மாடலோ, ரூ.62.35 லட்சம் முதல் ரூ.68.22 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.