2023ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட ஸ்கிராம்ப்ளர் ரேஞ்சை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது டுகாட்டி
இந்தியாவில் 2023ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட அடுத்த தலைமுறை ஸ்கிராம்ப்ளர் ரேஞ்சை வெளியிட்டிருக்கிறது டுகாட்டி. இந்த அப்டேட் செய்யப்பட்ட ஸ்கிராம்ப்ளரை ஐகான், ஃபுல் த்ராட்டில் மற்றும் நைட்ஷிப்ட் என மூன்று வேரியன்ட்களாக வெளியிட்டிருக்கிறது டுகாட்டி. இந்த ஸ்கிராம்ப்ளர்களில் புதிய போல்ட்-ஆன் சப்-ஃபிரேமைப் பயன்படுத்தி, அதன் எடையை 4 கிலோ வரை குறைத்திருக்கிறது டுகாட்டி. அடிப்படையான ஐகான் மாடலில், ரைடரை மையப்படுத்திய புதிய ஹேண்டில்பாரை வழங்கியிருக்கிறது டுகாட்டி. ஸ்போர்ட்டியான ஸ்கிராம்பிளராக வேண்டும் என்பவர்களுக்கு ஃபுல் த்ராட்டில் வேரியன்டையும், கஃபே ரேசர் டைப் ஸ்கிராம்பிளர் விரும்பிகளுக்கு நைட்ஷிப்ட் வேரியன்டையும் வழங்குகிறது டுகாட்டி. புதிய அப்டேட்டட் ஸ்கிராம்ப்ளர்களில், ரோடு மற்றும் வெட் என இரண்டு ரைடிங் மோடுகளுடன் அட்ஜஸ்ட் செய்யும் வகையிலான ட்ராக்ஷன் கண்ட்ரோல் வசதியையும் அளிக்கப்பட்டிருக்கிறது.
2023 டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் ரேஞ்சு: இன்ஜின் மற்றும் விலை
இந்தப் புதிய அடுத்த தலைமுறை ஸ்கிராம்ப்ளர் ரேஞ்சில் 73hp பவர் மற்றும் 65.2Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, 6-ஸ்பீடு கியர்பாக்ஸூடன் இணைக்கப்பட்ட, இரண்டு சிலிண்டர்களைக் கொண்ட, 803சிசி ஏர்-கூல்டு இன்ஜின் கொடுத்திருக்கிறது இத்தாலியைச் சேர்ந்த பைக் தயாரிப்பு நிறுவனமான டுகாட்டி. முழுமையாக எல்இடி விளக்குகள் மற்றும் 4.3 இன்ச் கலர் TFT டிஸ்பிளே ஆகிய வசதிகளையும் புதிய ஸ்கிராம்ப்ளரில் அளித்திருக்கிறது டுகாட்டி. இந்தியாவில், இந்த ஸ்கிராம்ப்ளர் ரேஞ்சின் அடிப்படை வேரியன்டான ஐகானை ரூ.10.39 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், ஃபுல் த்ராட்டில் மற்றும் நைட்ஷிப் வேரியன்ட்களை ரூ.12 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியிட்டிருக்கிறது டுகாட்டி.