சிறிய அப்டேட்களைப் பெற்ற ஜாவா 42 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்குகள்
இந்தியாவில் விற்பனையாகி வரும் ஜாவா 42 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் ஆகிய மாடல்களின் அப்டேட் செய்யப்பட்ட புதிய வெர்ஷன்களை வெளியிட்டிருக்கிறது ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் நிறுவனம். இந்த அப்டேட்களானது மிகச் சிறிய அளவிலேயே செய்யப்பட்டிருக்கிறது. எனவே, தற்போது விற்பனையில் இருக்கும் மாடல்களுடன், கூடுதலாக விற்பனையில் இணையவிருக்கின்றன இந்தப் புதிய அப்டேட் செய்யப்பட்ட மாடல்கள். இன்ஜின் மாற்றம் மற்றும் கூடுதல் வசதிகள் எதுவுமின்றி சின்ன சின்ன காஸ்மெடிக் மாற்றங்களை மட்டும் மேற்கூறிய இரண்டு மாடல்களில் பைக்குகளிலும் மேற்கொண்டிருக்கிறது அந்நிறுவனம். இன்ஜினைப் பொருத்த வரை, தற்போதயை மாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே இன்ஜின்களே அப்டேட்டைப் பெற்ற ஜாவா 42 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்குகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன?
ஜாவா 42 பைக்கானது நான்கு புதிய டூயல் டோன் நிறங்களில் வெளியாகியிருக்கிறது. மேலும், புதிய ப்யூல் டேங்க் டெக்ஸ்டர், டைமண்டு கட் அலாய் வீல்கள், எக்ஸாஸ்டில் ரேவன் டெக்ஸ்டர், புதிய பாஷ் பிளேட் மற்றும் ஹேண்டில் பாரிலேயே பொருத்தப்பட்ட கண்ணாடிகளையும் பெற்றிருக்கிறது ஜாவா 42. சிங்கிள் சிலிண்டர் கொண்ட 294.7சிசி லிக்விட-கூல்டு இன்ஜினைப் பெற்றிருக்கும் ஜாவா 42வில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸூம், பாதுகாப்பிற்காக டூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும் ஸ்டாண்டர்டாகவே வழங்கப்படுகிறது. இந்தப் புதிய மாடலானது ரூ.1.98 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவிருக்கிறது. அதே போல் அப்டேட் செய்யப்பட்ட யெஸ்டி ரோட்ஸ்டர் பைக் மாடலானது ரூ.2.08 லட்சம் எகஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்படவிருக்கிறது.