இந்தியாவில் வெளியானது ஹோண்டாவின் 'கோல்டு விங் டூர்' லக்சரி பைக்
இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட கோல்டு விங் டூரர் லக்சரி பைக்கை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. இந்தப் புதிய மாடலுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் தற்போது தொடங்கியிருக்கின்றன. முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட CBU (Completely Built Unit) முறையில், இந்தியாவில் ஹோண்டாவின் ப்ரீமியமான பிங்விங் டீலர்ஷிப்கள் மூலம் இந்த பைக்கை விற்பனை செய்யவிருக்கிறது ஹோண்டா. புதிய அப்டேட்டட் மாடலில், முழுவதும் எல்இடி விளக்குகள், ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் கூடிய 7 இன்ச் வண்ண TFT டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உள்ளிட்ட வசதிகளை அளித்திருக்கிறது ஹோண்டா. மேலும், எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய வகையிலான விண்டு ஷீல்டுகள் மற்றும் டயர் பிரஷற் மானிட்டரிங் சிஸ்டத்தையும் இந்த பைக்கில் அளித்திருக்கிறது ஹோண்டா.
ஹோண்டா கோல்டு விங் டூர்: இன்ஜின் மற்றும் விலை
இந்த பைக்கில், 125hp பவர் மற்றும் 170Nm அதிகபட்ச டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய , 24 வால்வுகள் கொண்ட, 1,833சிசி இன்லைன் சிக்ஸ், லிக்விட் கூல்டு இன்ஜினைக் கொடுத்திருக்கிறது ஹோண்டா. இந்த இன்ஜினானது 7 ஸ்பீடு DCT கியர்பாக்ஸூடன் இணைக்கப்பட்டிருக்கிறது. டூர், ஸ்போர்ட், எகோ மற்றும் ரெய்ன் என நான்கு ரைடிங் மோடுகளைக் கொண்டிருக்கும் இந்த பைக்கானது ரைடு-பை-வயர் வசதியுடன் விற்பனை செய்யப்படவிருக்கிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் லக்சரி டூரர் பைக்குகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக வெளியாகியிருக்கும் இந்த பைக்கானது, ரூ.30.2 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவிருக்கிறது.