பாகிஸ்தான் கிரிக்கெட் அணி: செய்தி

வீரர்களுக்கு வரலாறு காணாத ஊதிய உயர்வை வழங்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் வீரர்களுக்கு இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய ஊதிய உயர்வை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ODI உலகக்கோப்பை : இந்தியா-பாகிஸ்தான் போட்டி தேதி மாற்றம் உறுதி; பாக். கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்

2023 ஒருநாள் உலகக்கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் போட்டி முன்பு திட்டமிடப்பட்ட அக்டோபர் 15ஆம் தேதிக்குப் பதிலாக அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.

சரண்டரான இலங்கை; 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒயிட் வாஷ் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

கொழும்புவில் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

SL vs PAK 2வது டெஸ்ட் : மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 397 ரன்கள் முன்னிலை

பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே, கொழும்புவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3வது நாளில் (ஜூலை 26) பாகிஸ்தான் 397 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

146 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; பாக். கிரிக்கெட் வீரர் சவுத் ஷகீல் சாதனை

இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது பாகிஸ்தான் விளையாடி வருகிறது.

ஒருநாள் உலகக்கோப்பை 2023 : இந்தியா-பாகிஸ்தான் போட்டி அட்டவணையை மாற்ற திட்டம்

இந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானை அக்டோபர் 15ல் எதிர்கொள்ள உள்ளது.

கொட்டித்தீர்த்த மழை; இலங்கை vs பாகிஸ்தான் இரண்டாம் நாள் ஆட்டம் ரத்து

இலங்கையின் கொழும்புவில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் (ஜூலை 25) ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

சீனாவின் ஹாங்சோவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் பாகிஸ்தானை விட பின்தங்கிய இந்திய அணி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டம் திங்கட்கிழமை (ஜூலை 24) மழை காரணமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு வெற்றி கிடைக்காமல் டிராவில் முடிந்தது.

பாகிஸ்தான் பந்துவீச்சு அபாரம்; 166 ரன்களுக்கு சுருண்டது இலங்கை கிரிக்கெட் அணி

கொழும்புவில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில், இலங்கை கிரிக்கெட் அணி தனது முதல் இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு சுருண்டது.

INDvsPAK போட்டிக்கு ஹோட்டல் முன்பதிவு ஓவர்; மருத்துவமனை அறையை வாடகைக்கு எடுக்கும் ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் நேருக்கு நேர் மோத உள்ளது.

பாகிஸ்தான் இளம் கிரிக்கெட் வீராங்கனை திடீர் ஓய்வு அறிவிப்பு; காரணம் இது தான்

18 வயதான பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் இளம் வீராங்கனை ஆயிஷா நசீம், வியாழன் (ஜூலை 20) அன்று அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

முதல் டெஸ்டில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது பாகிஸ்தான்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

'சேவாக்கை அவுட்டாக்குவது எளிது' : பாக். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ராணா நவேத்-உல்-ஹாசன்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ராணா நவேத்-உல்-ஹாசன், இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்குடன் விளையாடிய நாட்களில் அவரை ஸ்லெட்ஜிங் செய்து வெறுப்பேற்றிய சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பிசிசிஐக்கு 38.5 சதவீதம்; ஐசிசி வருவாய் மாதிரியால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024-27 சுழற்சிக்கான 600 மில்லியன் டாலர் வருவாயில் உறுப்பு நாடுகளுக்கான பங்கு சதவீதத்தை அறிவித்ததில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் இரட்டை சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர்; சவுத் ஷகீல் சாதனை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சவுத் ஷகீல், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது முதல் இரட்டைச் சதத்தைப் பதிவு செய்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஜஸ்ப்ரீத் பும்ராவை பின்னுக்குத் தள்ளிய ஷாஹீன் அப்ரிடி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி காலேயில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) தொடங்கி நடைபெற்று வருகிறது.

டெஸ்டில் 3,000 ரன்களை கடந்த முதல் பாக். விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்த சர்பராஸ் அகமது

டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்த முதல் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை சர்பராஸ் அகமது பெற்றுள்ளார்.

'இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் விளையாடத் தயார்' : பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் பாபர் அசாம்

இந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையின் போது இந்தியாவில் எந்த மைதானத்திலும் எந்தப் பக்கத்தையும் எதிர்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தயாராக உள்ளது என்று அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் வியாழக்கிழமை (ஜூலை 6) தெரிவித்தார்.

'இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமானது' : முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல்

இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த ஆண்டில் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை என பல சந்தர்ப்பங்களில் ஒருவரையொருவர் எதிர்கொள்ள உள்ளன.

01 Jul 2023

பிசிசிஐ

ICC உலகக் கோப்பை 2023: இந்தியாவுக்கு வர திட்டமிட்டிருக்கும் பாகிஸ்தான் ஆய்வு குழு

இந்த ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாட இருக்கும் மைதானங்களை ஆய்வு செய்வதற்காக ஒரு பாதுகாப்புக் குழுவை பாகிஸ்தான் இந்தியாவுக்கு அனுப்ப உள்ளது.

இந்த உலகக்கோப்பையை பாகிஸ்தான் அணி வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்: வாசிம் அக்ரம்

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டிருக்கும் நிலையில், இந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பைக் குறித்துப் பேசியிருக்கிறார் அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம்.

27 Jun 2023

ஐசிசி

இந்தியாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வருவது சந்தேகம்? ஐசிசி விளக்கம்

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணையை செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வெளியிட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது அணியை அனுப்புவது இன்னும் ஊசலாட்டமாகவே உள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு சிறப்பு வசதியை ஏற்படுத்தியுள்ள ஐசிசி

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணை செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வெளியிடப்பட்ட நிலையில், இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதலின் தேதி மற்றும் இடம் குறித்து அனைவரின் பார்வையும் குவிந்துள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் பாகிஸ்தானின் சாதனையை முறியடித்த ஜிம்பாப்வே

திங்களன்று (ஜூன் 26) அமெரிக்காவுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் சீன் வில்லியம்ஸ் தலைமையிலான ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புதிய உலக சாதனை படைத்துள்ளது.

இந்தியாவுக்கு கிரிக்கெட் அணியை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்பது மற்றும் அதன் வீரர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் உட்பட அனைத்து அம்சங்களையும் மதிப்பீடு செய்து வருவதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (ஜூன் 22) தெரிவித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு அரசியல்வாதிகள் தடையாக இருக்க கூடாது என முன்னாள் கேப்டன் வலியுறுத்தல்

ஹைப்ரிட் மாடல் முறைக்கு ஒப்புதல் அளித்து ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்த சர்ச்சை தீர்க்கப்பட்டாலும், இது பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவை விட பாகிஸ்தான் கிரிக்கெட் வலுவானது : முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டட்

ஆசிய கோப்பை 2023க்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய மறுத்ததற்காக பிசிசிஐ மீது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியாண்டட் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

சென்னை, பெங்களூரில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் சென்னை மற்றும் பெங்களூர் போன்ற சில மைதானங்களில் விளையாடுவது தங்களுக்கு வசதியாக இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அகமதாபாத்தில் மட்டும் வேண்டாம்! ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாட இந்தியா வர பாகிஸ்தான் சம்மதம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேத்தி, ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லேயிடம், இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தங்கள் அணி விளையாடாது என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பையை வேறு நாட்டுக்கு மாற்றினால் தொடரிலிருந்து வெளியேற பாகிஸ்தான் முடிவு!

ஆசிய கோப்பையை நடத்துவது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்மொழிந்த ஹைபிரிட் மாடலை ஏற்க இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஏற்க மறுத்ததை அடுத்து வேறு வழியின்றி, பாகிஸ்தான் செப்டம்பரில் நடக்க உள்ள ஆசிய கோப்பையில் இருந்து முழுமையாக வெளியேறும் எனத் தெரிகிறது.

இந்தியாவில் தான் ஒருநாள் உலகக்கோப்பை! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஐசிசி பேச்சுவார்த்தை!

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்க இந்தியா வருவதை உறுதி செய்ய ஐசிசி தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியும் பாகிஸ்தானின் லாகூரில் முகாமிட்டுள்ளனர்.

ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023 : பாகிஸ்தானின் ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொள்ள பிசிசிஐ மறுப்பு!

2023 ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) ஹைப்ரிட் மாடலை ஏற்க முடியாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

'ஒருநாள் உலகக்கோப்பையை புறக்கணிப்போம்' : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மிரட்டல்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜாம் சேத்தி கூறுகையில், ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை தங்கள் நாடு இழந்தால், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலக கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

'ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து வெளியேறுவோம்' : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானில் நடக்காது எனது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் நஜாம் சேத்தி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து விலகுவோம் என மிரட்டியுள்ளார்.

09 May 2023

ஐசிசி

ஏப்ரல் மாதத்திற்கான ஐசிசி மாதாந்திர சிறந்த வீரர், வீராங்கனை விருது அறிவிப்பு!

பாகிஸ்தான் பேட்டர் ஃபகர் ஜமான் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரராகவும், தாய்லாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் நருமோல் சாய்வாய் சிறந்த வீராங்கனையாகவும் ஐசிசியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கல்தா! ஆசிய கோப்பை போட்டியை இலங்கையில் நடத்த திட்டம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை வேறு நாட்டில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

48 மணி நேரத்தில் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

ஞாயிற்றுக்கிழமை (மே 7) கராச்சியில் நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் சர்வதேச போட்டியில் நியூசிலாந்திடம் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் தனது உலகின் நம்பர் 1 இடத்தை இழந்தது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்து பாபர் அசாம் சாதனை

கராச்சியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் வெள்ளிக்கிழமை (மே 5), சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்களை வேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி! பிசிசிஐ திட்டம்!

இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா நடத்த உள்ளது.

முந்தைய
அடுத்தது