Page Loader
48 மணி நேரத்தில் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
48 மணி நேரத்தில் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

48 மணி நேரத்தில் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

எழுதியவர் Sekar Chinnappan
May 08, 2023
12:56 pm

செய்தி முன்னோட்டம்

ஞாயிற்றுக்கிழமை (மே 7) கராச்சியில் நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் சர்வதேச போட்டியில் நியூசிலாந்திடம் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் தனது உலகின் நம்பர் 1 இடத்தை இழந்தது. 46.1 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான் ஒருநாள் தரவரிசையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவை விட பின்தங்கி 3வது இடத்திற்குச் சென்றது. நியூஸிலாந்துக்கு எதிரான இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணியால் எடுக்கப்பட்ட மிகக் குறைந்த ஸ்கோர் இதுவாகும். மேலும் பாகிஸ்தானின் கேப்டனும் ரன்-மெஷின் என வர்ணிக்கப்படும் பாபர் அசாம் இந்த போட்டியில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இது அசாமுக்கு 100வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

how pakistan tops in odi cricket rankings

ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் முதலிடத்திற்கு முன்னேறியது எப்படி?

முன்னதாக, வெள்ளியன்று (மே 5) நடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் நான்காவது ஆட்டத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்திற்கு உயர்ந்தது. மேலும் முதல் 4 போட்டிகளில் நியூசிலாந்தை வீழ்த்தி 4-0 என தொடரையும் ஏற்கனவே கைப்பற்றி இருந்தது. ஆனால் அதன் நம்பர் 1 இடத்தைத் தக்கவைக்க தொடரை 5-0 என வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்நிலையில், கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 49.3 ஓவர்களில் 299 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தானின் டாப் ஆர்டர் நியூசிலாந்து பந்துவீச்சுக்கு எதிராக தடுமாறியது. இறுதியில் பாகிஸ்தான் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியதால், முதலிடத்தை 48 மணி நேரங்களில் இழந்தது.