Page Loader
ஏப்ரல் மாதத்திற்கான ஐசிசி மாதாந்திர சிறந்த வீரர், வீராங்கனை விருது அறிவிப்பு!
ஏப்ரல் மாதத்திற்கான ஐசிசி மாதாந்திர சிறந்த வீரர், வீராங்கனை விருது அறிவிப்பு

ஏப்ரல் மாதத்திற்கான ஐசிசி மாதாந்திர சிறந்த வீரர், வீராங்கனை விருது அறிவிப்பு!

எழுதியவர் Sekar Chinnappan
May 09, 2023
04:30 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் பேட்டர் ஃபகர் ஜமான் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரராகவும், தாய்லாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் நருமோல் சாய்வாய் சிறந்த வீராங்கனையாகவும் ஐசிசியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமர்ஸ், முன்னாள் சர்வதேச வீரர்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் அடங்கிய சிறப்புக் குழுவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பைத் தொடர்ந்து, இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக நவம்பர் 2022 இல் பாகிஸ்தானின் சைத்ரா அமீன் ஐசிசி மாதாந்திர விருதை பெற்ற பிறகு, தற்போது ஃபகர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மேலும் நியூசிலாந்திற்கு எதிரான பாகிஸ்தானின் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெற்றியில் இவர் இரண்டு முறை சதமடித்து முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

player of the month thailand women captain

முதல் முறையாக ஐசிசி விருது வென்ற தாய்லாந்து வீராங்கனை

மகளிர் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் தாய்லாந்து 3-0 என்ற கணக்கில் பெற்ற வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, அதில் அதிக ரன்களை குவித்த நருமோல் இந்த விருதை வென்றுள்ளார். இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்ததற்காக நருமோல் சாய்வாய் தொடரின் சிறந்த வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. விருது குறித்து பேசிய சாய்வாய், "சமீபத்திய தொடர் ஒருநாள் அரங்கில் எங்கள் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த அணிக்கும் எனக்கும் முக்கியமான தொடர் இது. எல்லாவற்றிற்கும் மேலாக எனது வெற்றியை அடையாளம் காட்டியதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்." என்று தெரிவித்தார்.