உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் பாகிஸ்தானை விட பின்தங்கிய இந்திய அணி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டம் திங்கட்கிழமை (ஜூலை 24) மழை காரணமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு வெற்றி கிடைக்காமல் டிராவில் முடிந்தது. இதன் காரணமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியில் 16 புள்ளிகளைப் பெற முடிந்தாலும், அவர்களின் வெற்றி பெற்ற புள்ளிகளின் சதவீதம் 66.67 சதவீதமாக உள்ளது. இதனால் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியில் 100 வெற்றி பெற்ற புள்ளிகளின் சதவீதத்தை கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. முன்னதாக, இலங்கையில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் முதலிடத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியில் இந்தியாவின் போட்டிகள்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியில், இந்தியா அடுத்து இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கான இரண்டு வெளிநாட்டு தொடர்களை கொண்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு வெளிநாட்டு தொடர் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு உள்நாட்டு தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கிடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில், ஆஸ்திரேலியா 54.17 சதவீதத்துடனும், இங்கிலாந்து 29.17 சதவீதத்துடனும், வெஸ்ட் இண்டீஸ் 16.67 புள்ளிகளுடனும் முறையே 3,4 மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன. இலங்கை 0 சதவீதத்துடன் ஆறாவது இடத்தில் உள்ள நிலையில், இதர அணிகள் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.