உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஜஸ்ப்ரீத் பும்ராவை பின்னுக்குத் தள்ளிய ஷாஹீன் அப்ரிடி
செய்தி முன்னோட்டம்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி காலேயில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) தொடங்கி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை முதல் இன்னிங்ஸில் 312 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில் சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மூன்று பேரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ள ஷாஹீன் அப்ரிடி, இந்த விக்கெட்டுகள் மூலம் ஜஸ்ப்ரீத் பும்ராவை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
shaheen afridi in wtc
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட்டுகள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் மூன்றாவது சுழற்சி கடந்த மாதம் ஆஷஸ் தொடருடன் தொடங்கியது. பாகிஸ்தான் இந்த சுழற்சியின் முதல் டெஸ்டில் இலங்கையுடன் தற்போது விளையாடி வருகிறது.
இந்நிலையில் மூன்று சுழற்சிகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக, தற்போது 21வது போட்டியில் விளையாடி வரும் ஷாஹீன் அப்ரிடி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 80 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இதன் மூலம் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் 20 டெஸ்டில் 79 விக்கெட்களை எடுத்துள்ள இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ராவை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
இந்த பட்டியலில், தற்போது மேற்கிந்திய தீவுகள் தொடரில் விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா 25 டெஸ்ட் போட்டிகளில் 81 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 24 டெஸ்ட் போட்டிகளில் 85 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஷாஹீன் அப்ரிடியை விட முன்னிலையில் உள்ளனர்.