ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்து பாபர் அசாம் சாதனை
கராச்சியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் வெள்ளிக்கிழமை (மே 5), சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்களை வேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். பாபர் அசாம் 97 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்து, 101இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்திருந்த தென்னாப்பிரிக்க வீரர் ஹாஷிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பாபர் ஒருநாள் கிரிக்கெட்டில் 5,000 ரன்களை கடந்த 14வது பாகிஸ்தானியர் ஆனார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களில் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் 11,701 ரன்களுடன் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்தவராக உள்ளார்.