சரண்டரான இலங்கை; 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒயிட் வாஷ் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
கொழும்புவில் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. முன்னதாக, திங்கட்கிழமை (ஜூலை 24) போட்டியில் டாஸ் வென்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை முதல் நாளிலேயே 166 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், நான்காம் நாள் (ஜூலை 27) காலையில் 576 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. இதில் பாகிஸ்தான் அணியின் அப்துல்லா சபீக் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். மேலும் ஆஹா சல்மானும் சதமடித்தார்.
188 ரன்களுக்கு சுருண்ட இலங்கை
411 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், நான்காவது நாளிலேயே 188 ரன்களுக்கு சுருண்டு தோல்வியைத் தழுவியது. பாகிஸ்தான் அணியில் நோமன் அலி 7 விக்கெட்டுகளையும், நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் 9 ஆண்டுகள் கழித்து இலங்கை மண்ணில் பாகிஸ்தான் அணி 2-0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்துள்ளது. கடைசியாக 2014இல் தான் தொடரை 2-0 என காப்பாற்றியிருந்தது. 2014முதல், பாகிஸ்தான் இலங்கை மண்ணில் தொடரை இதுவரை இழந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், 1994ஆம் ஆண்டு வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் இலங்கை வீரர்களை ஒயிட் வாஷ் செய்தது இது இரண்டாவது நிகழ்வாகும்.