ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு
சீனாவின் ஹாங்சோவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முழு பலம் வாய்ந்த டி20 அணியை அறிவித்துள்ளது. டயானா பெய்க் மற்றும் ஷவால் சுல்பிகர் ஆகியோர் இந்த தொடரின் மூலம் மீண்டும் அணிக்கு திரும்புகின்றனர். அதே நேரத்தில் அனோஷா நசீரும் தனது அபார ரன்ரேட் காரணமாக அணியில் இடம் பிடித்துள்ளார். அணியின் முன்னாள் கேப்டன் பிஸ்மா மரூப், தனது குழந்தையுடன் ஹாங்சோவுக்கு பயணிக்க முடியாததால் விலகியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டி நிகழ்வின் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி, விளையாட்டு வீரர்கள் தங்கள் குழந்தைகளை உடன் அழைத்துச் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
2023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பாகிஸ்தான் மகளிர் அணி
பாகிஸ்தான் மகளிர் அணி: நிடா தார் (கேப்டன்), அலியா ரியாஸ், அனோஷா நசீர், டயானா பெய்க், பாத்திமா சனா, முனீபா அலி, நஜிஹா அல்வி, நஷ்ரா சந்து, நடாலியா பர்வைஸ், ஒமைமா சோஹைல், சதாப் ஷமாஸ், ஷவால், சல்ஃபிக். தலைமை பயிற்சியாளர்: மார்க் கோல்ஸ். பந்துவீச்சு பயிற்சியாளர்: சலீம் ஜாபர். பீல்டிங் பயிற்சியாளர்: மொஹ்தாஷிம் ரஷீத். பிசியோதெரபிஸ்ட்: ரிஃபாத் கில். மேலாளர்: ஆயிஷா அஷ்ஹர். தற்போதைய நிலவரப்படி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே அணி பாகிஸ்தான் மட்டுமேயாகும். 2010 இல் சீனாவின் குவாங்சோ மற்றும் 2014 இல் தென் கொரியாவின் இன்சியான் ஆகிய இரண்டு சீசன்களிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியே இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.