பாகிஸ்தான் பந்துவீச்சு அபாரம்; 166 ரன்களுக்கு சுருண்டது இலங்கை கிரிக்கெட் அணி
செய்தி முன்னோட்டம்
கொழும்புவில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில், இலங்கை கிரிக்கெட் அணி தனது முதல் இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு சுருண்டது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் முடிவை எடுத்த இலங்கை அணிக்கு, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் நசீம் ஷா மற்றும் அப்ரார் அகமது ஆகியோர் மூலம் அதிர்ச்சி காத்திருந்தது.
இலங்கை அணியில் தனஞ்சய டி சில்வா மட்டுமே அரைசதம் கடந்து 57 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப அணிகளில் வெளியேறினர்.
பாகிஸ்தான் அணியின் அப்ரார் அகமது அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், நசீம் ஷா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
players reached milestones
போட்டியில் வீரர்கள் எட்டிய மைல்ஸ்டோன்கள்
நவம்பர் 2019 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான நசீம் ஷா, இப்போது 17 போட்டிகளில் 35.02 சராசரியில் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக, ஆறு டெஸ்டில் 26.80 சராசரியில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அப்ரார் அகமது தற்போது ஆறு டெஸ்ட் போட்டிகளில் 30.18 சராசரியில் 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கொழும்பு மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பாக செப்டம்பர் 1993 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 168 ரன்களை எடுத்ததே, இங்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முந்தைய குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.